Ayodhya Ram Temple: முதல் மழைக்கே தாங்காத ராமர் கோயில்.. மேற்கூரையில் கசிவு – தலைமை அர்ச்சகர்..!
Ram Temple: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அயோத்தி ராமர் கோயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராமர் கோயில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவது பதிவாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பிராண் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு இன்னும் ஓராண்டு கூட நிறைவு பெறவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக உத்திர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் மேற்கூறையில், மழை நீர் கசிவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்துப் பேசுகையில், 2025ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைவது சாத்தியமற்றது என கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
Also Read: ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.50%, சேமிப்புக்கு 7.75% வட்டி: இந்த வங்கியை நோட் பண்ணுங்க!
அயோத்தியில் ராமர் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டது. ராமர் கோயில் கட்டுமானம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது என்று கூறலாம். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பலரும் இதில் கலந்துக்கொண்ட நிலையில் சிலர் இதனை புறக்கணித்தனர். ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் குழந்தை ராமர் சிலையில் இருக்கும் நுட்பங்கள் பற்றி பெரிதும் பேசப்பட்டது. உத்திர பிரதேசத்தில் இருக்கும் ராமர் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்படியான நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அயோத்தி ராமர் கோயிலின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
#Ayodhya: The roof of newly constructed bhavya #RamMandir has started leaking in the first rain itself says Acharya Satyendra Das, the cheif priest of the Ram Mandir.
It’s not even been six months since the inauguration by maha manav.. pic.twitter.com/LZf1mB7QHa
— Saba Khan (@ItsKhan_Saba) June 24, 2024
இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராமர் கோயில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவது பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், ” கட்டிடத்தில் வரும் பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவது முக்கியம். கட்டப்பட்ட ராமர் கோயிலில் நீர் வடிகால் வசதி இல்லை. மேலே இருந்து தண்ணீர் கசியத் தொடங்கிய பிறகு சிலை இருக்கும் இடத்தில் அது தேங்க தொடங்கியது. கசிவு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை, அது முதலில் தீர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read: மதுரை டூ பெங்களூரு வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை.. விவரங்கள் இதோ..!