5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bangladesh Protest : இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச பிரதமர்.. மோடி, ராகுல் அவசர ஆலோசனை!

Bangladesh Clash | வங்க தேசத்தில் தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு கடந்த சில நாட்களாகவே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அங்கு நிலமை கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் அங்கு மீண்டு போராட்டம் வெடித்துள்ளது.

Bangladesh Protest : இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச பிரதமர்.. மோடி, ராகுல் அவசர ஆலோசனை!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 17 Oct 2024 10:46 AM

வங்கதேச போராட்டம் : வங்க தேசத்தில் தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு கடந்த சில நாட்களாகவே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அங்கு நிலமை கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் அங்கு மீண்டு போராட்டம் வெடித்துள்ளது. வங்கதேசத்தின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் மோடி, ஜெயசங்கர் தீவிர ஆலோசன

வங்கதேசத்தில் போராட்டக்காரர்களிடன் ஆட்சியை பறிகொடுத்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருடன் ஆலோனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெயசங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வங்கதேசத்தின் நிலை, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bangladesh Protests : நாட்டை விட்டு ஓடிய பிரதமர்.. வங்கதேசத்தில் நடக்கும் பிரச்னை என்ன? ஏன் தொடர் கலவரம்?

ராணுவ ஆட்சியில் வங்க தேசம் – அடுத்து நடக்கப்போவது என்ன?

வங்கதேசத்தில் பிரதமர் ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இது குறித்து பொதுமக்களிடம் உரையாற்றிய அந்நாட்டின் ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான், வங்க தேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வங்க தேச கலவரம் குறித்து குடியுரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இதுகுறித்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவரிடம் அவர் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Bangladesh Riots: மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.. 100 பேர் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

நாளுக்கு நாள் தீவிரமடையும் கலவரம்

வங்கதேசத்தில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இரண்டாவது முறையாக வங்க தேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில் அங்கு இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் போராட்டக்காரர்களால் பிரதமரின் அலுவலகம் சூரையாடப்பட்ட நிலையில், அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்ட காரர்கள் அந்நாட்டின் மத்தியை சிறையை திறந்து கைதிகளை விடுவித்தது மட்டுமன்றி, சிறையை தீ வைத்து கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest News