5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Landslide : நிலச்சரிவு பாதிப்பு.. வங்கி கடன்களை தள்ளுபடி செய்து கேரளா வங்கி அறிவிப்பு!

Affected People | வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Wayanad Landslide : நிலச்சரிவு பாதிப்பு.. வங்கி கடன்களை தள்ளுபடி செய்து கேரளா வங்கி அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவு
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Aug 2024 10:55 AM

வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் 3 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அதன்படி, நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மலை அடிவாரத்தை ஒடியுள்ள 3 கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள். இந்த கோர சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், வீடு, உடைமகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா வங்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : Crime: 7 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… அதிர்ச்சி வாக்குமூலம்!

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் – கேரளா வங்கி

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது மட்டுமன்றி, வங்கி ஊழியர்கள் அனைவரும் தங்களின் 5 நாட்கள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அரசு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தார்.  இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்ததோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைப்பேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதையும் படிங்க : Shocking News : 10 ரூபாய் குளிர்பானத்தை குடித்த 5 வயது சிறுமி பரிதாப பலி.. நடந்தது என்ன?

அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அசு முழு உதவியை வழங்கும் என்றும் உறுதி அளித்தார். மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த மக்களின் வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிகக்ப்பட்டுள்ளது அந்த மக்களுக்கு சற்று ஆதரவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News