Bengaluru: மாடியில் கஞ்சா தோட்டம்.. வீடியோ மூலம் வசமாக சிக்கிய இளம் ஜோடி!

Couple Arrest: பணி நிமித்தம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம் பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். சாகர் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், ஊர்மிளா குமாரி வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டை நிர்வகித்து வந்துள்ளார். இதனுடைய வீட்டில் வேலைகள் எல்லாம் செய்து முடித்த பின்னர் சும்மா இருப்பதால் ஊர்மிளாவுக்கு போர் அடித்துள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

Bengaluru: மாடியில் கஞ்சா தோட்டம்.. வீடியோ மூலம் வசமாக சிக்கிய இளம் ஜோடி!

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Nov 2024 17:19 PM

கஞ்சா செடி வளர்த்த தம்பதி:  பெங்களூருவில் வீட்டு மாடியில் கஞ்சா தோட்டம் வைத்திருந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் இந்த ஜோடி போலீசில் வசமாக சிக்கியுள்ளது. அம்மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்எஸ்ஆர் நகரில் சாகர் குருங் என்ற 33 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஊர்மிளா குமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் பெங்களூரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாமச்சி என்ற பகுதிதான் சொந்த ஊராகும்.

Also Read: Crime: மனைவி, மகள் கொலை.. தொழிலாளி தற்கொலை முயற்சி.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!

ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம்

பணி நிமித்தம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம் பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். சாகர் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், ஊர்மிளா குமாரி வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டை நிர்வகித்து வந்துள்ளார். இதனுடைய வீட்டில் வேலைகள் எல்லாம் செய்து முடித்த பின்னர் சும்மா இருப்பதால் ஊர்மிளாவுக்கு போர் அடித்துள்ளது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகலாம் என்று நினைத்த ஊர்மிளா குமாரி தினமும் வீடியோ போடலாம் என முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்பை விட மிகவும் ஆர்வமாக சமூக வலைத்தளங்களில் களம் இறங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பதிவிடுவது மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவது  என மணிக்கணக்காக சமூக வலைத்தளங்களில் செலவிட்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டில் நடக்கும் விசேஷங்கள், தனக்கு பிடித்த விஷயங்கள், தான் செய்யும் நிகழ்வுகள் என ஒன்று விடாமல் அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார். அதற்கு வரும் லைக்ஸ், கமெண்டுகள் பார்த்து இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தான் வசிக்கும் வீட்டின் தோட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் ஊர்மிளா குமாரி வெளியிட்டிருந்தார்.

Also Read: Viral Video: தொல்லை கொடுத்த தெரு நாய்.. துப்பாக்கியால் சுட்ட நபர்.. வலுக்கும் கண்டனம்!

தோட்டத்தில் இருந்த கஞ்சா

இந்த வீடியோ வைரலான நிலையில் பெங்களூரு நகர போலீசார் கண்ணிலும் பட்டுள்ளது. அந்த வீடியோவில் அவரது தோட்டத்தில் ஒரு ஓரத்தில் கஞ்சா செடி போன்ற தாவரம் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து சாகர் மற்றும் ஊர்மிளா தம்பதியினர் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தபோது அந்த தோட்டத்தில் அவர்கள் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். அதே சமயம் வீட்டு தோட்டத்தில் இருந்த இரண்டு செடிகளில் இருந்து கஞ்சா இலைகள் பிடுங்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.  இருவரும் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து கஞ்சா செடிகளை குப்பையில் வீசி இருப்பதை போலீசாரிடம் காட்டிய அந்த தம்பதியினர் நீங்கள் வருவதை கண்டதும் அப்படி செய்து கஞ்சா செடிகளை அழிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இந்த கஞ்சா செடிகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் வளர்க்கப்பட்டவையா? அல்லது ரீல்ஸ் மோகத்தில் இப்படி நடந்ததா? என்ற  சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் வந்து செல்போன் கைப்பற்றப்பட்டு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் நோக்கத்தில் இளம் வயதினர் பலரும் ஆபத்தை உணராமல் விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இளம் வயதினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தீராத கழுத்து வலியா? இதை பண்ணுங்க
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!