5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு மாலில் அனுமதி மறுப்பு.. உடனடியாக பறந்த உத்தரவு.. அடுத்து நடந்தது என்ன?

Bengaluru Mall Issue | கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியாருக்கு சொந்தமான ஜிடி மால் உள்ளது. அங்கு இளைஞர் ஒருவர் தனது தந்தையை திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவரது தந்தைக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Viral Video : வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு மாலில் அனுமதி மறுப்பு.. உடனடியாக பறந்த உத்தரவு.. அடுத்து நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட தந்தை மகன்
vinalin
Vinalin Sweety | Published: 19 Jul 2024 12:52 PM

வைரல் வீடியோ : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனியாருக்கு சொந்தமான ஜிடி மால் உள்ளது. அங்கு இளைஞர் ஒருவர் தனது தந்தையை திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவரது தந்தைக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகன் இருவரும், அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மாலின் விதிகளின் படி வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி கிடையாது என ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு – வெடித்த சர்ச்சை

வேட்டி கட்டியதால் மாலில் முதியவருக்கு அனுமதி மருக்கப்பட்ட விவகாரம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், மால் நிர்வாகம் சார்பில் அந்த ஊழியர்கள் தந்தை மற்றும் மகனிடம் மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் வேட்டி கட்டியதற்காக அனுமதி மறுத்தற்கு, ஜிடி மாலை தற்காலிகமாக 7 நாட்களுக்கு மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி நேற்று மாலை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றாப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

தனது அனுபவத்தை பகிர்ந்த தொழிலதிபர்

இந்த விவகாரம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். அதேபோல தொழிலதிபர் ஒருவர் தனக்கு பெங்களூருவில் நடந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்ட மை ஃபிரிடோ நிறுவனர் கணேஷ் சோனாவனே, உண்மை தான், எனக்கும் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நான் ஷூவிற்கு பதிலாக செருப்பு அணிந்து சென்றதால் அவர்கள் என்னை அனுமதிக்க மறந்துவிட்டனர் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Hardik Pandya : ஹர்திக் பாண்டியா முதல் ஷிகர் தவான் வரை.. விவாகரத்து செய்துகொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்

பொதுவாக திரையரங்குகளில் லுங்கி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், வேட்டி அணிந்து சென்றதால் விவசாயிக்கும் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News