Bengaluru Techie Suicide: பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை.. மனைவி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

Atul Subash Wife Arrest : பெங்களூருவில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதுலின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவருடைய தாய் மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bengaluru Techie Suicide: பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை.. மனைவி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

அதுல் சுபாஷ், அவரது மனைவி நிஷா சிங்கானி

Updated On: 

15 Dec 2024 10:53 AM

பெங்களூருவில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதுலின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவருடைய தாய் மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா பதுங்கி இருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர். நிகிதாவின் தாய் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோரும் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கிருந்து 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். நிகிதாவின் மாமா சுஷில் சிங்கானியா தற்போது தலைமறைவாக உள்ளார். அவர்களை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பொறியாளராக பணியாற்றி வந்தவர் ஆதுல் சுபாஷ் (34). இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் வழக்குகள் உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அதுல் சுபாஷ் மீது வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என பல வழக்குகளை நிகிதா  சிங்கானியா தொடர்ந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 12ஆம் தேதி அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் பரவியது. பெங்களூருவில் மஞ்சுநாத்லேஅவுட் பகுதியில் தங்கியிருந்த அதுல் சுபாஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனத கழுத்தில் நீதி தேவை என்ற எழுதப்பட்ட காகிதத்தை கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதுல் சுபாஷின் உடலை மீட்டனர். முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அதுல் சுபாஷ் 90 நிமிட வீடியோவை பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறார். மேலும், 24 பக்க தற்கொலை கடிதமும் எழுதியிருக்கிறார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Also Read : ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா? நாடாளுமன்றத்தில் நாளை மசோதா தாக்கல்!

மனைவி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

இந்த வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோவில், ”கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். நிகிதாவும் அவரது குடும்பத்தினரும் தன்னை துன்புறுத்தவும், ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்புக்காக பெரும் தொகையைப் பறிப்பதற்காகவும் பல வழக்குகளைத் தொடர்ந்தனர்.

முதலில் எனது மனைவி ரூ.1 கோடி ஜீவனாம்சம் கேட்டார். பின்னர், ரூ.3 கோடி கேட்டார். இதற்கிடையே, பாராமரிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.80,000 வழங்க நீதிமன்றம் எனக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் நடந்த போது, பொய் வழக்குகளால் ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று நான் கூறினோன். அதற்கு என் மனைவி அப்படியானால் நீங்கள் ஏன் தற்கொலை செய்யக் கூடாது என்று கூறினார். குடும்ப நல நீதிபதிக்கு முன்னால் என்னனை அவமானப்படுத்தினார். அப்போது அந்த நீதிபதி என்னை பார்த்து சிரித்தார்.

அப்போது, அவர் நீங்கள் இறந்தாலும், உங்கள் சொத்தின் மீது உங்களது மனைவிக்கு உரிமை உண்டு என்று கூறினார். எனது தற்கொலை குறிப்பு கடிதத்துடன் மற்றொரு கடிதத்தையும் வைத்துள்ளேன். அதனை எனது மகன் அவரது 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திறந்து பார்க்க வேண்டும். அதில் அவருக்காக பரிசு ஒன்றை வைத்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுல் சுபாஷ் மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பி.என்.எஸ் பிரிவு 108 மற்றும் 3(5)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது சகோதரர் பிகாஸ் குமார், நிகிதா, அவரது தாய் நிஷா, சகோதரர் அனுராக் மற்றும் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கு பதிவு செய்தார்.

Also Read : “சாவர்க்கரை அவமதிக்கிறீங்க” பாஜகவை கிண்டல் செய்த ராகுல் காந்தி!

அதே நேரத்தில் அதுல் சுபாஷின் மனைவி உட்பட 4 பேரும்  தலைமறைவாகி இருந்தனர். இந்த நிலையில், தீவிரமாக அவர்களை தேடிய போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம்  குருகிராமில் நிகிதா பதுங்கி இருந்தார். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

நிகிதாவின் தாய் நிஷா சிங்கானியா மற்றும் மைத்துனர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவலின்படி, டிசம்பர் 14 அன்று, பெங்களூரு போலீசார் நிகிதாவை குருகிராமில் இருந்து கைது செய்தனர். அதே நாளில், நிகிதாவின் தாய் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோரும் பிரயாக்ராஜில் கைது செய்தனர்.

எந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கக்கூடாது..?
அதிகளவில் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?