அம்மாடி! மாசத்துக்கு ரூ.7 லட்சம் சம்பளமா? திக்குமுக்காடும் பெங்களூரு தம்பதி!

Bengaluru couple : பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர், மாதந்தோறும் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், அதில் ரூ.3 லட்சம் வரை மீதம் இருப்பதாகவும் அதனை எப்படி சேமிக்கலாம் என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பதிவில், தானும் தனது மனைவியும் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிவதாக அந்த நபர் கூறியுள்ளார். குழந்தைகள் இல்லாத இரட்டை வருமானம் கொண்ட குடும்பமாக இருப்பதால் அவர்களால் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் பெரும் பகுதியைச் சேமிக்க முடிகிறது எனவும், குடும்பச் செலவுகள், கார் பராமரிப்பு மற்றும் பிற செலவுகள் போக, அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 3 லட்சத்திற்கு மேல் மீதம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை எப்படி முறையாக சேமிப்பது என கேட்டுள்ளார், இதற்கு பலரும் கிண்டலான முறையில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அம்மாடி! மாசத்துக்கு ரூ.7 லட்சம் சம்பளமா? திக்குமுக்காடும் பெங்களூரு தம்பதி!

மாதம் ரூ.7 லட்சம் வருமானம் ஈட்டும் பெங்களூரு தம்பதியின் வைரல் பதிவு

Updated On: 

18 Jun 2024 13:19 PM

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர், மாதந்தோறும் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், அதில் ரூ.3 லட்சம் வரை மீதம் இருப்பதாகவும் அதனை எப்படி சேமிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பணியிடங்கள் மற்றும் நிதி பற்றி விவாதிக்க இந்திய தொழில் வல்லுநர்களுக்கான தளமான கிரேப்வைன் செயலி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அதில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர், தானும் தனது மனைவியும் இணைந்து மாதம் ரூ.7 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், செலவுகள், சேமிப்பு போக மீதம் ரூ.3 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் தங்களை தத்தெடுத்துக்கொள்ளும் படியும் கமெண்ட் செய்துள்ளனர்.

தானும் தனது மனைவியும் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிவதாக அந்த நபர் கூறியுள்ளார். குழந்தைகள் இல்லாத இரட்டை வருமானம் கொண்ட குடும்பமாக இருப்பதால் அவர்களால் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் பெரும் பகுதியைச் சேமிக்க முடிகிறது எனவும், குடும்பச் செலவுகள், கார் பராமரிப்பு மற்றும் பிற செலவுகள் போக, அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ. 3 லட்சத்திற்கு மேல் மீதம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையை க்ரேஎப்வைன் செயலியில் பதிவிட்ட அவர், முறையாக சேமிப்பது எப்படி என்பது குறித்து சந்தேகம் கேட்டுள்ளார்.  மேலும் மாதம் ரூ.7 லட்சம் வருமானம் இருப்பினும் ரூ.2 லட்சம் வரை பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மீதம் இருக்கும் ரூ. 3 லட்சத்தை முறையாக சேமிக்க ஆலோசனை வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலரும் கிண்டலான முறையில் கமெண்ட் செய்துள்ளனர்.

மென்பொருள் பொறியாளரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு சுமார் 200 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் பலரும் கிண்டலான முறையில் கமெண்ட் செய்துள்ளனர். அதிலும் ஒருவர், போதிய சம்பளம் கிடைக்காத எனக்கு அந்த 3 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு பங்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு பயணாளர், என்னை தத்தெடுத்துக்கொள்ளுங்கள் என கிண்டலான முறையில் கமெண்ட் செய்துள்ளார்.

ஆனால் பலரும், பணத்தை சேமிக்கும் முறை பற்றி விளக்கியுள்ளனர். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பலரும் பரிந்துரை செய்துள்ளனர். அதில் ஒரு நபர், தம்பதியரை ஒரு வீட்டை வாங்கி அதை Airbnb இல் வைத்து இரண்டாவது வருமான ஆதாரத்தை உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் விலங்கு நல தொண்டுகள் அல்லது அனாதை இல்லங்கள் போன்றவற்றிற்கு நன்கொடை வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார்.

 

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!