Bengaluru Chennai Expressway: பெங்களூரு டூ சென்னை.. 2 மணி நேரத்தில் போகலாம்.. இந்தாண்டு இறுதியில் இருக்கு சர்ப்ரைஸ்! - Tamil News | | TV9 Tamil

Bengaluru Chennai Expressway: பெங்களூரு டூ சென்னை.. 2 மணி நேரத்தில் போகலாம்.. இந்தாண்டு இறுதியில் இருக்கு சர்ப்ரைஸ்!

நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், நெடுஞ்சாலையில் வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இரண்டு பெரிய வளர்ந்த நகரங்களை இணைக்கும் சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரண்டு பெரிய வளர்ந்த நகரங்களை இணைக்கும் சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரையும் இணைக்கும் வகையில் சென்னை -பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது.

Bengaluru Chennai Expressway: பெங்களூரு டூ சென்னை.. 2 மணி நேரத்தில் போகலாம்.. இந்தாண்டு இறுதியில் இருக்கு சர்ப்ரைஸ்!

மாதிரிப்படம்

Updated On: 

10 Jul 2024 16:07 PM

சென்னை டூ பெங்களூரு அதிவிரைச் சாலை: நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், நெடுஞ்சாலையில் வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இரண்டு பெரிய வளர்ந்த நகரங்களை இணைக்கும் சாலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரையும் இணைக்கும் வகையில் சென்னை -பெங்களூரு அதிவிரைவு சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து முக்கிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதாவது, சென்னை – பெங்களூரு அதிவிரைச் சாலையை இந்த ஆண்டு டிசம்பருக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்தின் பாராட்டு நிகழ்வில் கட்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூ.17,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் திட்டமிடப்பட்டதை விட ஒரு வருடம் முன்னதாக 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.

Also Read: நொறுங்கிய பேருந்து.. உடல் நசுங்கி 18 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் சோகம்!

2 மணி நேரத்தில் போகலாம்:

இந்த விரைவுச் சாலை 240 கி.மீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையைக் கொண்டிருக்கும். இந்த மாபெரும் உள்கட்டமைப்பு திட்டத்திற்காக கிட்டத்தட்ட 2,650 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மூன்று கட்டங்களாக பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கர்நாடகாவின் ஹோஸ்கோட் மற்றும் ஆந்திராவின் பெத்தமங்களா முதல் குடிபாலா வரையிலான 85 கி.மீ தூரத்தை இணைக்கிறது. மூன்றாவது கட்டமாக 106 கி.மீத தூரம் குடிபாலா முதல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் வரை இணைக்கிறது. இந்த பெங்களூரு – சென்னை அதிவிரைவுச் சாலை பெங்களூரு ஹோஸ்கோடேவில் தொடங்கி ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவின் ஹோஸ்கோடேவில் தொடங்கி மாளூர் வழியாக ஆந்திராவின் வி கோடா, பாலமானேர் ஆகிய பகுதிகளின் வழியாக தமிழ்நாட்டில் அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை அடையும் விதமாக கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை – பெங்களூரு தற்போதைய பயண நேரமாக 5 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறையும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் இன்னும் வேகமாக எளிதாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 7 மாநிலங்கள்.. 13 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்.. கவனம் ஈர்க்கும் ஹிமாச்சல் ஏன்?

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!