5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vande Bharat Rail: வேற லெவல்… ரெடியான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எந்த ரூட் தெரியுமா?

வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதிநவின வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

Vande Bharat Rail: வேற லெவல்… ரெடியான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எந்த ரூட் தெரியுமா?
வந்தே பாரத் ஸ்லீப்பர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Sep 2024 17:23 PM

வந்தே பாரத் ரயில்கள்: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரயில். வந்தே பாரத் ரயில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. பயணிகள் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. முதலில் நீலம், வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரயில்கள் பின்னர் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என பெருநகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 77 வழித்தடங்களில் 51 வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

Also Read: மீண்டும் அதிர்ச்சி.. மருத்துவமனையில் நர்ஸுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ந்த கொல்கத்தா!

தமிழகத்தில் சென்னை – நெல்லை, பெங்களூரு -சென்னை, சென்னை – விஜயவாடா, கோவை – பெங்களூரு, சென்னை – கோவை உள்ளட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரெடியான வந்தே பாரத் ஸ்லீப்பர்


இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி பெங்களூருவில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளின் புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது. ஸ்லீப்பர் ரயில்களின் புகைப்படங்கள் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டிருக்கிறார்.

இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வரை வேகம் செல்லும் திறன் கொண்டிருக்கும். அதிநவின வசதிகளுடன் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் வசதி, மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக கழிவறை, படுக்கைகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்த ரயில் தயாரிக்க்பபட்டுள்ளது.

Also Read:  செல்ஃபி மோகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் என்னாச்சு?

மேலும், இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். 11 ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட பெட்டிகள், இரண்டு அடுக்கு படுக்கை கொண்ட பெட்டிகள் நான்கு, முதல் ஏசி வகுப்பு என மொத்தம் 16 பெடிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இருக்கும். மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 611 பெர்த்களும், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 188 பெர்த்களும், முதல் வகுப்பில் 24 பெர்த்களும் உள்ளன.  இந்த ரயில் முதலில் பெங்களூரு வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Latest News