5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 29 வயதான பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பெண் மகாலட்சுமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 23 Sep 2024 16:41 PM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 29 வயதான பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த பெண் மகாலட்சுமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த நபரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இப்படியாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அதிர்ச்சி தரும் புதிய தகவல் வெளிவந்துள்ளது.  அதாவது, பெண்ணின் உடல் 50 துண்டுகளாக வெட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக பிரிட்ஜ் மற்றும் அதன் அருகில் இருந்த சூட்கேஸ் ஒன்றிலும் சில உடல் உறுப்புகள் கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்

பிரேத பரிசோதனைக்காக உடல் கைப்பற்றும் போது 50 துண்டுகளாக உடல் உறுப்புகள் கிடந்தது தெரியவந்துள்ளது. குடல், தலை, கால், கைகள் என 50 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டு சில பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டதாகவும், சில பாகங்கள் சூட்கேஸில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. உடல் பாகங்களை கைப்பற்றுவது பெரும் சவாலாக இருந்துள்ளது.

Also Read: சிறை டூ அபராதம்.. சிறார்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர்  தயானந்தா கூறுகையில், “இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.  சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் பெங்களூரில் தங்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவக் கூடும் என்பதால் எங்களால் கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியாது.

இன்று அதிகாலையில், குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் ஒரு நீல நிற சூட்கேஸைக் கண்டுபிடித்ததாகவும், அதில் பெண்ணின் சடலம் துண்டு துண்டாக கிடந்தது. சூட்கேஸ் மீட்கப்பட்டதையடுத்து, கொலையாளி உடலை அந்த இடத்தை விட்டு நகர்த்த விரும்பினாரா அல்லது வேறு இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டதா என்பதை விசாரித்து வருகிறோம்” என்றார்.

கணவருடன் தகராறா?

கொலை செய்யப்பட்ட பெண் மகாலட்சுமி. மகாலட்சுமியின் குடும்பத்தினர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவுக்கு குடிப்பெயர்ந்தனர். மகாலட்சுமி பெங்களூருவில் பிறந்து வளர்ந்துள்ளார். இவர் மல்லேஸ்வரத்தில் ஆடை விற்பனைக் கூடத்தில் குழுத் தலைவராகப் பணிபுரிந்து தனியாக பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். மகாலட்சுமிக்கு ஹேமந்த் தாஸ் (32) என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருப்பதாகவும் கணவர் தாஸ் குற்றம் சாட்டினார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது மகளை தாஸ் நெலமங்களாவுக்குச் சென்று தங்கள் மகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: திருப்பதி லட்டு சர்ச்சை.. பெருமாளை வேண்டி 11 நாட்கள் தவம் இருக்கும் பவன் கல்யாண்..!

இப்படியான சூழலில், கடந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சுமார் 4-5 நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கலாம். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை முறியடிக்க 6 குழுக்களை அமைத்துள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாதிக்கப்படும் பெண்களுக்கு தெரிந்த நபர்களே இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நின்ற பாடில்லை. இதற்கு பெண்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Latest News