5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime News : வீட்டுக்கு ஏன் சிக்கன்? தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்.. வேடிக்கை பார்த்த தாய்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சமைப்பதற்காக கோழியை கொண்டு வந்த இளைஞரை, அவரது சகோதரர்கள் கொடூர கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் அவர்கள், தனது சகோதரர் கோழி கொண்டு வந்த ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

Crime News : வீட்டுக்கு ஏன் சிக்கன்? தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்.. வேடிக்கை பார்த்த தாய்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Nov 2024 12:56 PM

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சமைப்பதற்காக கோழியை கொண்டு வந்த இளைஞரை, அவரது சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் அவர்கள், தனது சகோதரர் கோழி கொண்டு வந்த ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.  மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான அன்ஷுல் யாதவ். இவரது மூத்த சகோதரர் குல்தீப் மற்றும் இளைய சகோதரர் அமன். இவர்கள் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெரி பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருகின்றனர். அன்ஷுல் மற்றும் அவரது சகோதரர்கள் பைராகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தனர்.

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்

இவர்கள் மூன்று பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.  மேலும், இவர்கள் மூன்று பேரும் மதுவுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. குல்தீப், அமன் மற்றும் அவரது தாய் ஆகியோர் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவார்கள்.

ஆனால், அன்ஷுல் யாதவ் வேலைக்கு செல்லும் இடத்தில் அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிற்கு கோழியை அன்ஷுல் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். ஹோட்டல் மூடப்பட்டிருந்ததால் அவர் கோழியை வாங்கிக் கொண்டு வீட்டில் சமைத்து சாப்பிட முடிவு செய்தார்.

அதன்படியே வீட்டிற்கு அன்ஷுல் யாதவ் கோழியை வீட்டிற்கு கொண்டு வந்தார். குடிபோதையில் இருந்த அன்ஷுல் யாதவ், கோழிக்கறி சமைப்பதற்கான சமையலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கிருந்த அவரது சகோதரர்கள் மற்றும் தாய் கடும் கோபத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது.

Also Read : கலவர பூமியான மணிப்பூர்.. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் சூறை… ஊரடங்கு அமல்!

கோழியை வீட்டிற்கு எடுத்து வந்ததால் ஆத்திரம்

மேலும், கோழியை காட்டி அவர்களை கேலி செய்தார் அன்ஷுல் யாதவ்.  இதனால் இவருக்கும், இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் அன்ஷுல் யாதவை கயிற்றால் கழுத்தை நெரித்துள்ளனர்.

இதில் மயங்கிய அன்ஷுல் யாதவை, குல்தீப், அமன் மற்றும் அவர்களது தாய் அனிதா ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அன்ஷுல் யாதவை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

அன்ஷுலின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : “மோடிக்கு ஞாபக மறதி” பைடனை வைத்து கலாய்த்த ராகுல் காந்தி!

சிக்கிய சகோதரர்கள்

அதில் அன்ஷுல்  யாதவ் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  கொலை குறித்து சகோதரர்கள் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தாய் அனிதா முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை தீவிரப்படுத்திய நிலையில் உண்மையை ஒப்புக் கொண்டார். மேலும், சகோதரர் குல்தீப், அமனிடமும்  நடத்திய விசாரணையில், அன்ஷுல் யாதவை கழுத்து நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, போலீசார் தாய் அனிதா, மகன் குல்தீப், அமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கோழியை வீட்டிற்கு எடுத்து வந்த காரணத்திற்காக இளைஞரை, அவரது சகோதரர் மற்றும் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News