5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அம்மாடி! 9 நாள்களில் இடிந்து விழுந்த 5ஆவது பாலம்.. பீகாரில் தொடர் பதற்றம்!

சமீப காலமாக பீகாரில் மேம்பாலங்கள் இடிந்து விழுந்து வருகிறது. இதற்கிடைய மீண்டும் அதேபோன்று சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் மதுபானி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாக கட்டுமானம் நடந்த வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. மதுபானி மாவட்டத்தில் உள்ள பீஜா காவல் நிலையத்தின் மாதேபூர் பகுதியில் 75 மீட்டர் நிளம் உள்ள பாலம் கட்டுப்பட்டு வந்தது.

அம்மாடி!  9 நாள்களில் இடிந்து விழுந்த 5ஆவது பாலம்.. பீகாரில் தொடர் பதற்றம்!
பாலம் இடிந்து விழுந்து விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2024 15:48 PM

பீகாரில் தொடர் பதற்றம்: சமீப காலமாக பீகாரில் மேம்பாலங்கள் இடிந்து விழுந்து வருகிறது. இதற்கிடைய மீண்டும் அதேபோன்று சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் மதுபானி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாக கட்டுமானம் நடந்த வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. மதுபானி மாவட்டத்தில் உள்ள பீஜா காவல் நிலையத்தின் மாதேபூர் பகுதியில் 75 மீட்டர் நிளம் உள்ள பாலம் கட்டுப்பட்டு வந்தது. ரூ.3 கோடி மதிப்பிலான இந்த பாலத்தை கட்டும் பணி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறை இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு வரும் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் 25 மீட்டர் நீளமுள்ள ஒரு தூண் சரிந்து விழுந்துள்ளது. இதுவே இந்த விபத்து காரணமாக அமைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.  சமீபத்தில் பால விபத்துகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “மதுபானி-சுபால் இடையே பேய் ஆற்றில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. கண்டுபிடித்தீர்களா? உங்களால் முடிந்தால் தீர்வு காணுங்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இடிந்து விழுந்த பாலங்கள்:

கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி பாலம் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 23ஆம் தேதி கட்டுமானப் பணிகள் இருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது. அதற்கு முன்பு ஜூன் 22ஆம் தேதி சிவான் பகுதியில் கண்டக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. அதேபோல ஜூன் 19ஆம் தேதி அராரியாவில் கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பக்ரா ஆற்றில் குறுக்கே பல கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் இடிந்து விழுந்தது.

சுமார் 9 நாட்களில் 5 மேம்பாலங்கள் இடிந்து விழுந்திருப்பது பீகார் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவங்கள் குறித்து பீகார் அரசு விசாரணை நடத்தி வந்தாலும், இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறார். மோசமான திட்டமிடுதல், தரம் குறைந்த பொருட்கள் கொண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெளுத்து வாங்கிய மழை.. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

Latest News