5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அடுத்தடுத்து உயிரிழப்புகள்.. ஆற்றில் மிதந்த 43 பேரின் சடலங்கள்.. பீகாரில் புனித நீராடும்போது நடந்த சோகம்!

பீகார் மாநிலத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவித்புத்ரிகா விழாவில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 37 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து உயிரிழப்புகள்.. ஆற்றில் மிதந்த 43 பேரின் சடலங்கள்..  பீகாரில் புனித நீராடும்போது நடந்த சோகம்!
மாதிரிப்படம் (picture credit: Getty)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Sep 2024 16:49 PM

பீகார் மாநிலத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி 43 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிவித்புத்ரிகா விழாவில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஜிவித்புத்ரிகா எனும் விழாவில் நேற்று 15 மாவட்டங்களில் நடந்ததாககவம், இதில் குழந்தைகள், பெரியவர்கள் ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடி உள்ளனர். அப்போது, நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை 43 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளர். இதில் 37 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது?

வடமாநிலமான பீகாரில் ஜிவித்புத்ரிகா பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொண்டாடப்படும்.
இந்த ஜிவித்புத்ரிகா பண்டிகையில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த பண்டிகையில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் இருந்து வழிபட்டு அருகில் இருக்கும் குளம், ஆற்றில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த பண்டிகை நேற்று பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. அப்போது குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் விரதம் இருந்து நீராட தயாராக இருந்தனர். ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினார்.

அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட 47 சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்!

பீகாரின் 15 மாவட்டங்களில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் ஆகிய மாவட்டங்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Latest News