“ஹிஜாப்பை கழற்றுங்கள்” இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதாரை சரிபார்த்த பாஜக வேட்பாளர்!
நான் ஒரு வேட்பாளர். சட்டத்தின்படி எனது பகுதி வாக்களர்களின் வாக்காளர் அடையாள அட்டையை சர்பார்க்கவும், முகமூடி அணியாமல் பார்க்கவும் உரிமை உண்டு என்றார்.
இஸ்லாமிய வாக்காளர்களை சரிபார்த்த பாஜக வேட்பாளர்:
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று 96 தொகுதிகளில் நடந்து வருகிறது. காலை முதலே வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா, வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண்களிடம் ஆதார் வாங்கி சர்பார்த்துள்ளார். இந்த சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அசம்பூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 122க்கு வாக்கு செலுத்த சென்ற பாஜக வேட்பளார் மாதவி லதா, அங்கு ஹிஜாப் அணிந்துக் கொண்டு அமர்ந்திருந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையை காண்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, முகத்தில் இருக்கும் பர்தாவை கழற்றுமாறும் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
So BJP Candidate Madhavi Latha checks the identities of Burqa clad women at a polling station in Old city of Hyderabad. She asked the women wearing burqa to remove their ‘Niqab’. Cop watching quietly, Where are the EC officials?? pic.twitter.com/7cF5etWuRu
— Rajdeep Sardesai (@sardesairajdeep) May 13, 2024
மேலும், “எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாக்காளர் அட்டையை நீங்கள் பெற்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். ஆதார் அட்டையும் அவர்களிடம் கேட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், லதா மீது மலக்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
“நான் ஒரு வேட்பாளர்.. சட்டப்படி எனக்கு உரிமை உண்டு”
இதுகுறிதத்து மாதவி லதா கூறுகையில், “நான் ஒரு வேட்பாளர். சட்டத்தின்படி எனது பகுதி வாக்களர்களின் வாக்காளர் அடையாள அட்டையை சர்பார்க்கவும், முகமூடி அணியாமல் பார்க்கவும் உரிமை உண்டு. நான் ஒரு ஆண் அல்ல. நான் ஒரு பெண். மிகவும் பணிவுடன், நான் அவர்களிடம் கேட்டேன். தயவுசெய்து அடையாள அட்டையை சரிபார்க்க உங்களை பார்க்க முடியுமா என்று தான் கேட்டேன். இந்த சம்பவத்தை யாராவது பெரிய பிரச்னையாக்க நினைத்தால். அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.
ஏற்கனவே, இவர் ராமநவமி ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா, தனது கைகளில் இருந்த வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து அருகில் இருக்கும் மசூதியை நோக்கி எய்து சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : சொந்த கட்சி எம்.பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர்? முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?