Vakbu Variyam : இன்று தாக்கலாகிறது வக்பு திருத்த வாரிய சட்ட மசோதா.. அதிகாரங்கள் பறிக்கப்படுமா?
Parliament | இந்தியா முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், மதராஸ்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி வருகின்றனர். இவ்வாறு தானமாக வழங்கப்படும் நிலங்கள் தான், வக்பு வாரிய சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்காக கடந்த 1954 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா : இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியங்களின் அதிகாரங்களை குறைக்க வழிவகை செய்யும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில் எதிப்புகளையும் மீறி வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்ய உள்ளது, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா என்றால் என்ன, அதில் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
வக்பு வாரியம் என்றால் என்ன?
இந்தியா முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், மதராஸ்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி வருகின்றனர். இவ்வாறு தானமாக வழங்கப்படும் நிலங்கள் தான், வக்பு வாரிய சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இதற்காக கடந்த 1954 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த 1958 ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டன.
இதையும் படிங்க : Vinesh Phogat : மல்யுத்தத்தில் இருந்து விலகினார் வினேஷ் போகத்.. இனியும் விளையாட எந்த வலியும் இல்லை என ஆதங்கம்!
1995 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விரிவான சட்டம்
இந்த வக்பு வாரியங்கள் இஸ்லாமியர்களின் மசூதிகள் மற்றும் தர்காக்களை நிர்வகிக்கும் முறைகளை கண்காணிக்கும். அதுமட்டுமன்றி அந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துக்களையும் கண்காணிக்கும். இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்பான விரிவான சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு திருத்தம் கொண்டுவந்தது.
என்ன என்ன மாற்றங்கள் செய்யப்படும்
இந்நிலையில் கடந்த 1954 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்டத்தில், திருத்தங்களை மேற்கொண்டு பாஜக அரசு மசோதா தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவில் வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்படும், இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவரும் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இடம் பெறலாம், வக்பு வாரியத்தில் கணிசமான அளவு இஸ்லாமிய பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : Independence Day 2024: இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றிணைந்த வேலூர் சிப்பாய் புரட்சி… நடுநடுங்கிய ஆங்கிலேயர்கள்!
இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.