5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அமைச்சரவையில் இடம்பெற்ற நட்டா.. பாஜவின் புதிய தேசிய தலைவர் யார்?

பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவுக்கு மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக தேசிய தலைவராக பதவி வகித்த வந்த அமித்ஷா, மோடி அமைச்சரையில் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்ட பிறகு நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், மோடி அமைச்சரவையில் நட்டா இடம்பெற்றுள்ளார். 

அமைச்சரவையில் இடம்பெற்ற நட்டா.. பாஜவின் புதிய தேசிய தலைவர் யார்?
ஜெ.பி.நட்டா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Jun 2024 20:08 PM

பெரும் எதிர்பாப்புக்கு மத்தியில் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றார். பதவியேற்பு விழாவுக்கு நீல நிற கோட்  அணிந்து வந்த மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  மோடி பதவியேற்றபோது தொண்டர்கள் பலரும் மோடி மோடி என கோஷமிட்டனர். பிரதமர் மோடி ஐவஹர்லால் நேருவுக்கு பின்னர் 3வது முறையாக நாட்டின் பிரதமாராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்ந்தைப் பெறுகிறார். பிரதமர் மோடி பதவியேற்றதை தொடர்ந்து, அமைச்சர்கள் பலரும் பதவியேற்றுக் கொண்டனர்.

Also Read: அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி.. அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள் யார்?

இதில் குறிப்பாக பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டாவுக்கு மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். கடந்த 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு பாஜக தேசிய தலைவராக பதவி வகித்த வந்த அமித்ஷா, மோடி அமைச்சரையில் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்ட பிறகு நட்டாவுக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மோடி அமைச்சரவையில் நட்டா இடம்பெற்றுள்ளார்.  இவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


நட்டா அமைச்சரவையில் இருக்கும் நிலையில், பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார். ஆனால், அவர் யார் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை. நட்டாவை தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெயசங்கர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், மனோகர் லால் கட்டர், குமாரசாமி உள்ளிட்டடோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

Also Read: 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்!

Latest News