5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கும் மோகன் மாஜி.. பிரதமர் மோடி பங்கேற்பு!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக நவீன் பட்நாயக் நீடித்து வந்த நிலையில், இப்போது பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக உள்ளார். நேற்று ராஜ்நாத் தலைவர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, துணை முதல்வர்களாக கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டடனர். இந்த நிலையில், இன்று ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்க உள்ளார். இதன்பிறகு அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழா மாலை 5 மணிக்கு நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி மதியம் 12.45 மணிக்கு புவனேஸ்வருக்கு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கும் மோகன் மாஜி.. பிரதமர் மோடி பங்கேற்பு!
ஒடிசா முதல்வர் மோகன் மாஜி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 Jun 2024 08:19 AM

ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கும் மோகன் மாஜி: ஒடிசாவில் அசைக்க முடியாத அரசியல் கட்சி தலைவராக இருந்தவர் நவீன் பட்நாயக். 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஒடிசாவில் முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் ஒடிசாவில் கடந்த மாதம் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதன் மூலம் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது.பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து, மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக நவீன் பட்நாயக் நீடித்து வந்த நிலையில், இப்போது பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக உள்ளார். இதனை அடுத்து, நேற்று ராஜ்நாத் தலைவர் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, துணை முதல்வர்களாக கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டடனர். இந்த நிலையில், இன்று ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்க உள்ளார்.

Also Read: ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு.. மோடி டூ ரஜினி பங்கேற்பு!

மோடி பங்கேற்பு:

இதன்பிறகு அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழா மாலை 5 மணிக்கு நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி மதியம் 12.45 மணிக்கு புவனேஸ்வருக்கு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிற்பகல் 2.30 மணிக்கு புவனேஸ்வர் வந்து விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் செல்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா முதல்வரின் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனதா மைதானத்தில் நடைபெறும் விழாவில் விவிஐபிகள் தவிர சுமார் 30,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவை முன்னிட்டு புவனேஸ்வரில் உள்ள அலுவலகங்கள் பிற்பகல் 1 மணி முதல் மூடப்படும் என்றும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கியோஞ்சர் மாவட்டத்தின் ராய்கலா கிராமத்தில் காவலாளியின் மகனான பிறந்தார் மோகன் மாஜி. பட்டதாரியான இவர், 2000ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்வானார். தொர்ந்து 2004, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2024 மக்களவைத் தேர்தலில் கியோன்ஜார் தொகுதியில் 87,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை தோற்கடித்தார். ஒடிசா வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக பாஜக தேர்வு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தொடர்ந்து பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவரையும் உச்சபட்ச பதவிக்கு கொண்டு வந்துள்ளது பாஜக.

Also Read: முடிந்தது நட்டாவின் பதவிக்காலம்.. பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார்?

Latest News