5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

L.K. Advani: மருத்துவமனையில் சிகிச்சை.. எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

BJP Leader Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 1999 முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமராகவும் இருந்தவர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்த அத்வானி, தனது 14 ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார்.

L.K. Advani: மருத்துவமனையில் சிகிச்சை.. எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?
பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 27 Jun 2024 12:04 PM

எல்.கே அத்வானி மருத்துவமனையில் அனுமதி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 96 வயதான முன்னாள் துணைப் பிரதமர், பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்களால் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் எம்.ஸ்ரீனிவாஸை அழைத்து அத்வானியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அத்வானிக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் வார்டுக்கு வெளியே ஏராளமான விஐபி பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி வளாகத்தில் உள்ள தனியார் காவலர்களுக்கு பதிலாக டெல்லி போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கை:

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 1999 முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைச்சரவையில் முதலில் உள்துறை அமைச்சராகவும், பின்னர் துணைப் பிரதமராகவும் இருந்தவர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்த அத்வானி, தனது 14 ஆம் வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார். நீண்ட காலம் அரசியலில் இருந்த அவர், சட்டப்படிப்பு படித்துள்ளார். அத்வானி சிறந்த அறிவார்ந்த திறன், வலுவான கொள்கைகள் மற்றும் வளமான இந்தியா என்ற யோசனைக்கு அடித்தளமாகவும் ஆதரவாகவும் நின்ற ஒரு நபர். செப்டம்பர் 25, 1990 அன்று குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கிய ‘ரத யாத்திரை’யை வழிநடத்தி, டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதி இடிக்க வழிவகித்தார்.

Also Read: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

1989 ஆம் ஆண்டு தேர்தலில் அத்வானியின் பணி குறித்து விளக்கப்பட்டது. அதன் பின் பாஜகவின் வளர்ச்சி என்பது உயர்ந்துக்கொண்டே இருந்தது. 1989 ஆம் ஆண்டு 86 இடங்களும், 1992 ஆம் ஆண்டு 121 இடங்களும் 1996 ஆம் ஆண்டு 161 இடங்களும் வென்று இந்திய அரசியலில் ஓர் அசைக்கமுடியாத இடத்தை பாஜக பெற்றது. தற்போது வயது மூப்பு காரணமாக அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷணும், சமீபத்தில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. மேலும் எனது நாடு எனது வாழ்க்கை என்ற பெயரில் 1040 பக்கங்கள் கொண்ட சுயசரிதை எழுதி 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

Also Read:  திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடி தாருங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!

 

Latest News