“ஆம் ஆத்மியை அழிக்க சதி திட்டம்” கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு!
Arvind Kejriwal: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் என பலரும் பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவாலை முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் அவரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதுகுறித்து கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மோடி அவர்களே, மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், கெஜ்ரிவால் என ஒவ்வொவராக செய்து சிறையில் அடைகிறீர்கள். நான் எனது கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஞாயிற்றுகிழமை பகல் 12 மணிக்கு பாஜக தலைமையகத்துக்கு வருவேன். நீங்கள் யாரை சிறையில் அடைக்க விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
Also Read : I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான்.. சஸ்பென்ஸை உடைத்த உத்தவ் தாக்கரே!
“ஆம் ஆத்மியை அழிக்க சதி திட்டம்”
இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணி இன்று நடந்தது. இந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் என பலரும் பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
#WATCH | Delhi CM and AAP national convener Arvind Kejriwal along with party leaders leaves from the party office in Delhi
AAP will hold a protest outside BJP HQ against the arrest of its party leaders. pic.twitter.com/upZ52tNJkP
— ANI (@ANI) May 19, 2024
இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பார்க்கிறது பாஜக. ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்துகிறது பாஜக. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பிரதமர் முடிவு எடுத்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை கைது செய்வது, கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவது, கட்சியின் அலுவலகங்களை மூடுவது போன்றவற்றை பாஜக செய்கிறது. ‘ஆபரேஷன் ஜாது’ நடந்து கொண்டிருக்கிறது. அதாவது எனக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்து, பிரதமர் ஆம் ஆத்மி பற்றி பேசுவதை நிறுத்தவில்லை.
ஆம் ஆத்மி நன்றாக வேலை செய்கிறது. நாடு முழுவதும் எங்கள் கட்சியை பற்றி மக்கள் பேசுகின்றனர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது பாஜக. 2015ல் நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர்கள் (பாஜக) எத்தனை குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்? தேர்தலுக்குப் பிறகு பாஜக எங்கள் கணக்குகளை முடக்குவார்கள், எங்கள் அலுவலகம் முடக்கப்படும். நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவை மூன்றும் பாஜகவின் திட்டங்களாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read : “ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட போகிறேன்” I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் ராகுல் காந்தி!