மைனர் மனைவியுடன் பாலியல் உறவு சரியா? மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மனைவியாகவே இருந்தாலும், மைனர் பெண்ணுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது மைனர் மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனைவியாகவே இருந்தாலும், மைனர் பெண்ணுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது மைனர் மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவருக்கு எதிராக மனைவி தொடுத்த வழக்கில் அந்த நபருக்கு வர்தா விசாரணை நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. வர்தா மாவட்டத்தின் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
“மைனர் பெண்ணுடன் உடலுறவு கொள்வது குற்றம்”
இந்த வழக்கை நீதிபதி கோவிந்த் சனாப் விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பில், 18 வயதுக்குட்பட்ட பெண்ணுக்கு திருமணமானாலும், திருமணம் நடக்காமல் இருந்தாலும் அவருடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும்.
18 வயதுக்குட்பட்ட மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமை குற்றமாகவே கருதப்படும். மனைவி என்று கூறப்படும் பெண்ணின் வயது 18 வயதுக்குக் குறைவாக இருக்கும் போது, அவரின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பு கிடைக்காது.
Also Read : ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரத்தில் பிரபல நடிகரின் பர்ஸ் திருட்டு..!
18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் சம்மதிக்காமல் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு, 18 வயதுக்குட்பட்ட மனைவியின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதை ஏற்க முடியாது. திருமணமே நடத்திருந்தாலும், மைனர் பெண்ணின் சம்மதத்திற்கு எதிராக உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை தான்” என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், “குற்றம் நடந்த போது பெண் மைனராக இருந்துள்ளார். அடுத்து அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நடந்த டிஎன்ஏ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் தான் தந்தை என்று உறுயாகி உள்ளது, எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என்றார்.
வழக்கின் பின்னணி:
இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு முன்பு இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண் மைனராக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுடன் குற்றவாளி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டிருக்கிறார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த நபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் செய்த சிறுதி நாட்களிலே அந்த பெண்ணை துன்புறுத்தி வந்திருக்கிறார்.
அந்த பெண் மீது சந்தேகம் அடைந்து, அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், வேறு ஒருவருடன் உறவு இருப்பதாகவும், கருவில் இருக்கும் தனது குழந்தை இல்லை எனவும் குற்றச்சாட்டி, அந்த பெண் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும், கருவை கலைக்க சொல்லியும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
கருவை கலைக்க அந்த பெண் மறுத்ததால் அவரை தாக்கியுள்ளார். பின்னர், அந்த பெண் பெற்றோர் வீட்டிற்கு சென்று சிறிது நாட்கள் இருந்துள்ளார். அங்கேயும் வந்து அந்த பெண்ணை, அவர் இரண்டு முறை தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் 2019ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு வர்தா விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை என்று அவருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
Also Read : மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடைதிறப்பு.. குவியும் ஐயப்ப பக்தர்கள்!
அதாவது, அவரை குற்றவாளி என கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தான் அந்த நபர் மும்பை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனவே, மனைவியாகவே இருந்தாலும், மைனர் பெண்ணுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று கூறி, அந்த நபருக்கு விதித்த 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உறுதி செய்து தீர்ப்பளித்தது.