மருமகளை டிவி பார்க்க விடவில்லை.. நீதிமன்றத்திற்கு பறந்த வழக்கு.. அதிரடி தீர்ப்பு

மும்பை நீதிமன்றம்: மருமகளை டிவி பார்க்க விடாததும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு செல்லவதை அனுமதிக்காததும் கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகள் உடல் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கொடுமைப்படுத்தும் அளவுக்கு இல்லை என்று மும்பை நீதிமன்றம் கூறியது.

மருமகளை டிவி பார்க்க விடவில்லை.. நீதிமன்றத்திற்கு பறந்த வழக்கு.. அதிரடி தீர்ப்பு

மாதிரிப்படம் (picture credit: Getty)

Updated On: 

09 Nov 2024 17:11 PM

மருமகளை டிவி பார்க்க விடாததும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு செல்லவதை அனுமதிக்காததும் கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட சில பிரச்னைகள் காரணமாக கடந்த 2003ஆம் ஆண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற பெண், இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார். மகளின் தற்கொலை குறித்து பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

“மருமகளை டிவி பார்க்க விடாதது கொடுமை அல்ல”

மகள் தயாரித்த உணவை கேலி செய்ததது, கோயிலுக்கு தனியாக அனுப்பாதது, டிவி பார்க்க விடாமல் தடுப்பது, அக்கம் பக்கத்தினரை சந்திக்க விடாதது, நள்ளிரவு தண்ணீர் எடுக்க வைத்தது என கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம் கணவர் மற்றும் அவரது பெற்றோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.  ஜல்கான் மாவட்டத்தில் உள்ள  விசாரணை நீதிமன்றம் IPCயின் 498A மற்றும் 306 பிரிவுகளின் கீழ் மாமியார் மற்றும் கணவரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி அபய் வாக்வாஸ் விசாரணை நடத்தினார். கடந்த 20 ஆண்டுகளாக விசாரணை நடத்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Also Read : காருக்கே இறுதிச் சடங்கு செய்த விவசாயி.. 4 லட்சம் செலவு.. யார்ரா இவரு?

தற்கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

20 ஆண்டுகளுக்கு முன் குற்றவாளி என்று உள்ளூர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மருமகளை கேலி செய்தல், டிவி பார்க்க விடாமல் செய்தல், கோயிலுக்குத் தனியாகச் செல்வதைத் தடை செய்தல், கம்பளத்தில் தூங்கச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் கொடுமையாக கருத முடியாது நீதிமன்றம் கூறியது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498A-ன் கீழ் கடுமையான நடவடிக்கையாக இருக்காது என்றும் மும்பை நீதிமன்ற நீதிபதி நீதிபதி அபய் வாக்வாஸ் தீர்பளித்தார்.  இதனால், கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

குற்றச்சாட்டுகள் உடல் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கொடுமைப்படுத்தும் அளவுக்கு இல்லை என்று மும்பை நீதிமன்றம் கூறியது. கொடூரம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதற்காக IPC பிரிவுகள் 498A மற்றும் 306 இன் கீழ் கீழ் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது.

Also Read : தேர்தலில் ஜெயித்தால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம்- வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்!

எனவே, குற்றம் சாட்டப்பட்ட ஆணின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், இந்திய தண்டனை சட்டம் 498ஏ பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், வெறும் கம்பளத்தில் தூங்க வைப்பது கொடுமையாகாது.

அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பது துன்புறுத்தலாக கருத முடியாது. ஒன்று மன ரீதியாக கொடுமைப்படுத்துவார்கள், அல்லது உடல் ரீதியாக கொடுமைப்படுத்துவார்கள். ஆனால், அதனை ஒரு வார்த்தையில் அடைப்பது என்பது கடினம் என்று மும்பை நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!