பிரபல கொலை குற்றவாளி சோட்டா ராஜனுக்கு ஜாமின்.. ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவு..

ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பிரபல கொலை குற்றவாளியான சோட்டா ராஜனுக்கு ஜாமீனுக்காக ஒரு லட்ச ரூபாய் பத்திரத்தை அளிக்குமாறு ராஜனுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கொலை குற்றவாளி சோட்டா ராஜனுக்கு ஜாமின்.. ஆயுள் தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவு..

சோட்டா ராஜன்

Published: 

23 Oct 2024 12:57 PM

கடந்த 2001-ம் ஆண்டு ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜாமீனுக்காக ஒரு லட்ச ரூபாய் பத்திரத்தை அளிக்குமாறு ராஜனுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம், ஹோட்டல் அதிபர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது மேலிம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.


இந்த தண்டனையை எதிர்த்து ராஜன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தண்டனையை நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மத்திய மும்பையில் உள்ள காம்தேவியில் கோல்டன் கிரவுன் ஹோட்டலுக்குச் சொந்தமான ஜெயா ஷெட்டி, மே 4, 2001 அன்று ஹோட்டலின் முதல் தளத்தில் ராஜனின் கும்பலைச் சேர்ந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த ஹேமந்த் பூஜாரியிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் ஷெட்டிக்கு வந்ததாகவும், பணத்தைச் செலுத்தத் தவறியதால் அவர் கொல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

மூத்த குற்றச் செய்தியாளர் ஜே டே கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராஜன், தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!