5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime News : காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்.. அதிர்ச்சி வாக்குமூலம்.. உத்தர பிரதேசத்தில் பயங்கரம்!

Uttar Pradesh Crime News : உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதலித்து வந்த பெண்ணை, இளைஞர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நான்கு வயது மகன் முன்பே அந்த பெண்ணை, இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Crime News : காதலியை கொடூரமாக கொன்ற இளைஞர்.. அதிர்ச்சி வாக்குமூலம்.. உத்தர பிரதேசத்தில் பயங்கரம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Nov 2024 15:14 PM

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதலித்து வந்த பெண்ணை, இளைஞர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நான்கு வயது மகன் முன்பே அந்த பெண்ணை, இளைஞர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பெண்ணை காதலன் கொலை செய்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பி என்ற பெண். இவருக்கு அஜய் என்பவருடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார்.

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்

இதற்கிடையில், பெண் ஷில்பிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதீப்புடன் திருமணம் மீறிய உறவில் ஷில்பி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது குடும்பத்தை விட்டு தன்னுடன் வாழ வேண்டும் என்று பிரதீப் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். இதற்கு அந்த பெண் ஷில்பி மறுப்பு தெரிவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஷில்பியின் கணவர் வேலை சென்றபோது, அவரை சந்தித்த பிரதீப் வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கு, கணவரை விட்டு பிரிந்து வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இவர்களுக்கு இருவரும் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரத்தில் ஷில்பியின் கழுத்தை நெரித்து பிரதீப் கொலை செய்துள்ளார்.

Also Read : 50 ஆண்டுகளுக்கு பின் கயானா செல்லும் இந்தியப் பிரதமர்.. பிரதமர் மோடியின் பயணத்திட்டம் என்ன?

அதிர்ச்சி  காரணம்

அப்போது, அந்த இடத்தில் நான்கு வயது குழந்தையும் இருந்துள்ளது. அந்த நேரத்தில் அந்த பெண்ணை அவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து பிரதீப் தப்பிச் சென்றிருக்கிறார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவி சடலமாக கிடந்தததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தலைமறையாக இருந்த பிரதீப்பை கைது செய்தனர்.

இந்த கொலை குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Also Read : நெஞ்சை பதற வைக்கிறது – உ.பி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல்..

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், கொலை, வன்முறை சம்பவங்கள் நின்ற பாடில்லை. இதனால், கொலை, கொள்ளை, வன்முறை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Latest News