5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!

Viral Video: கடுமையான வெயிலிலும் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அசாம் மாநிலம் முதல்வர் ஹிமாந்தா சர்மா "ராஜஸ்தானில் பாலைவனம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும்” என்று பதிவிட்டிருந்தார்.

பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!
வீடியோ காட்சி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 May 2024 12:35 PM

இந்தியாவில் வாட்டி வதைக்கு வெயில்: இந்தியாவில் இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. குறிப்பாக, காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பகல் வேலைகளில் வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிடுகிறது.  தென் மாநிலங்களில் வெயில் தாக்கம் குறைவாக இருந்தாலும், வட மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாக உள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: “நியாயமான விசாரணை தேவை” ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் பதில்!

மேற்கண்ட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் 47 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “வட இந்தியாவில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கிறது. அடுத்த 2 முதல் 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானாவில் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலை இருக்கக்கூடும். உத்தர பிரதேசத்திற்கு ரெட் எச்சரிக்கையும், மத்திய பிரதேசத்தின் வடக்கு பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே மக்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்படுகிறது.

வைரல் வீடியோ:


இந்த கடுமையான வெயிலிலும் ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அசாம் மாநிலம் முதல்வர் ஹிமாந்தா சர்மா “ராஜஸ்தானில் பாலைவனம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் ராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும்” என்று பதிவிட்டிருந்தார். ராணுவ வீரர் பாலைவனத்தில் அப்பளம் பொரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 58 தொகுதிகளில் இன்று ஓய்கிறது பரப்புரை!

 

Latest News