5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 Date: மத்திய பட்ஜெட் 2024.. எதிர்பார்ப்புகள் என்ன? வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?

Union Budget 2024: யூனியன் பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது மத்திய அரசு தயாரிக்கும் பட்ஜெட் ஆகும். இது ஒரு நிதியாண்டுக்கான நிதிக் கணக்கீடு. பட்ஜெட் என்பது அடுத்த நிதியாண்டிற்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிடுவதாகும். ஒரு வருடம் முழுவதும் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? அதே நேரத்தில் எவ்வளவு செலவாகும் என்று கணிக்கப்படுவது ஆகும்.

Budget 2024 Date: மத்திய பட்ஜெட் 2024.. எதிர்பார்ப்புகள் என்ன? வரி சலுகை அறிவிப்பு வெளியாகுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 21 Jul 2024 19:54 PM

மத்திய பட்ஜெட் 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றதால் ஜூலை மாத்ததில் மத்திய முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக தேர்தல் ஆண்டில் இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி மாதத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதாவது இந்த பட்ஜெட் தேர்தல் முடியும் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். பின் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தான் நடைமுறை.

யூனியன் பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது மத்திய அரசு தயாரிக்கும் பட்ஜெட் ஆகும். இது ஒரு நிதியாண்டுக்கான நிதிக் கணக்கீடு. பட்ஜெட் என்பது அடுத்த நிதியாண்டிற்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிடுவதாகும். ஒரு வருடம் முழுவதும் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? அதே நேரத்தில் எவ்வளவு செலவாகும் என்று கணிக்கப்படுவது ஆகும். ஒரு நிதியாண்டு என்பது ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலகட்டத்தைக் குறிக்கிறது. பட்ஜெட்டானது வருவாய் பட்ஜெட் மற்றும் மூலதன பட்ஜெட் என 2 வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: உடலை ஆரோக்கியமாக்கும் சீரக தண்ணீர்.. தினமும் குடிப்பதால் பல நன்மைகள்!

இந்த ஆண்டு பட்ஜெட் நாளை மறுநாள் அதாவது வரும் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார்.

இந்த பட்ஜெட் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பை முன்வைத்துள்ளனர். கடந்த முறை நடைபெற்ற இடைக்கால பட்ஜெட்டில் அரசு எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை. இதன் காரணமாக இந்த முறை பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், வரி சலுகைகளும் இடம்பெறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read:  ஒருபக்கம் பத்மஸ்ரீ விருது.. மறுபக்கம் சாணியடி.. விவேக் வாழ்வில் நடந்த சம்பவம்!

Latest News