5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வெளுத்து வாங்கிய மழை.. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெயில் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், அங்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜூன் இறுதி வாரத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது. நேற்று முதல் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெளுத்து வாங்கிய மழை.. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Jun 2024 15:18 PM

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெயில் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், அங்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பருவமழை தொடங்கியது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜூன் இறுதி வாரத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது. நேற்று முதல் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கின. பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அதேநேரத்தில் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்டது. departure பகுதியின் முகப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிலருக்கு காயம் அடைந்துள்ளனர்.

Also Read: ஜியோ, ஏர்டல் வரிசையில் வோடாஃபோன்.. அதிரடியாக உயர்ந்த ரிசார்ஜ் கட்டணம்..!


இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராம் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் யாரும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  இந்த விமான நிலையம் ஜூலை 2023 இல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் இடிந்து விழும் மூன்றாவது விமான நிலையம் இது. டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையம் கடந்த 28ஆம் தேதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்தனர். ஜூன் 27ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-1ல் நிழற்குடை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் முழுமையான சோதனை நடத்தப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்தார்.

Also Read: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

Latest News