Himachal Pradesh: முதலமைச்சரின் சமோசாவை சாப்பிட்டது தப்பு.. இமாச்சலில் 5 பேருக்கு நோட்டீஸ்! - Tamil News | case has been filed against those who ate the samosas and cakes offered to Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukh | TV9 Tamil

Himachal Pradesh: முதலமைச்சரின் சமோசாவை சாப்பிட்டது தப்பு.. இமாச்சலில் 5 பேருக்கு நோட்டீஸ்!

Sukhvinder Singh Sukh: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு முதலமைச்சராக சுக்வீந்தர் சுக்கு பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று குற்றப்பிரிவு நிலையத்தை திறந்து வைத்தார்.

Himachal Pradesh: முதலமைச்சரின் சமோசாவை சாப்பிட்டது தப்பு.. இமாச்சலில் 5 பேருக்கு நோட்டீஸ்!

முதலமைச்சர் சுக்வீந்தர் சுக் (கோப்பு புகைப்படம்)

Published: 

08 Nov 2024 15:57 PM

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய சமோசா மற்றும் கேக்குகளை பாதுகாப்பு ஊழியர்கள் சாப்பிட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிஐடி காவல்துறை அளித்துள்ள அறிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டல் செய்துள்ளனர். பொதுவாக அரசு விழாக்கள் என்றால் அதில் பங்கேற்கும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி நிர்வாகிகள் வரை அனைவருக்கும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் சிற்றுண்டிகள், உணவுகள் வழங்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகும் நேரமின்மை, உணவு கட்டுப்பாடு போன்றவை காரணமாக முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய உணவுகளை சாப்பிடாமல் சென்றுவிடுவார்கள்.

இது பின்னர் அங்கு இருப்பவர்களால் காலி செய்யப்படுவது வழக்கம். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை அந்த உணவுகள் தனியாக பாதுகாக்கப்படும். பொது நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க இம்முறை பின்பற்றப்படுகிறது. அதேசமயம் முறையான கணக்கு வழக்குகளை சம்பந்தப்பட்ட நிர்வாக துறையினர் தாக்கல் செய்ய வேண்டும். இப்படியான நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று நாடு முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read: CJI DY Chandrachud: மத்திய அரசுக்கே சவால்.. ஓய்வு பெற்றார் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் !

முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு முதலமைச்சராக சுக்வீந்தர் சுக்கு பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறை தலைமை அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று குற்றப்பிரிவு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சுப்வீந்தர் சுக்கு சாப்பிடுவதற்காக அம்மாநிலத்தில் உள்ள ரேடிசன் ப்ளூ என்ற பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து சமோசா மற்றும் கேக்குகள் வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சருக்கு உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவர் எண்ணெய் உணவுகளை தவிர்த்து வந்ததால் அந்நிகழ்ச்சியில் சாப்பிடாமல் சென்றதாக சொல்லப்படுகிறது.

காணாமல் போன சமோசா, கேக்குகள்

இதனிடையே முதலமைச்சருக்கு என தனியாக வைக்கப்பட்டிருந்த சமோசா மற்றும் கேக்குகள் காணாமல் போனதைக் கண்டு மூத்த சிஐடி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சரின் பாதுகாவலர்களுக்கு பெண் சார்பு கண்காணிப்பாளர்கள் சமோசா மற்றும் கேக்குகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read: “இது திட்டமிட்ட சூது… சனாதன சூழ்ச்சி” ஒரே மேடையில் திருமாவளவன், விஜய்? விசிக பதில்!

இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி எஸ்பி கூறியுள்ள தகவலின்படி, “ஐஜி அளவில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி தான் சாப்பிடுவதற்காக அங்கிருந்து உதவி ஆய்வாளர் ஒருவரிடம் சிற்றுண்டி கேட்டுள்ளார்.  அவரோ முதலமைச்சருக்காக வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்கு முதலிலேயே தெரிந்துள்ளது. முதலமைச்சருக்கு என வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி என  கீழே இருந்தவர்களும் எடுத்து கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்உ பெண் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம் எனவும்,  அவர்கள் மாநில அரசுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளனர்.  உயர் அதிகாரியிடம் கேட்காமல் பல கைகள் மாறி அந்த சிற்றுண்டி சென்றுள்ளது” என்று கூறினார்.

5 பேருக்கு நோட்டீஸ்

இதனால் விஐபிக்கு அந்த உணவுகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பரிமாற முடியவில்லை. இது மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று சிஐடி எஸ்பி அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பெயர்களையும் குறிப்பிட்டு இருப்பது இமாச்சலப் பிரதேசத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் மாநில அரசையும் முதல்வர் சுக்வீந்தர் சுக்குவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மாநில வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசானது, முதலமைச்சருக்கு வழங்க வேண்டிய சமோசா மீது மட்டும் அக்கறை செலுத்தி வருகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இதை பெரிய பிரச்சினையாக மாநில அரசை யோசித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரச்சனை மூலம் அரசு அதிகாரிகளுக்கு இடையே உள்ள தகவல் தொடர்பு குறைபாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் ரணதீர் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!