5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NEET UG Row: பற்றி எரியும் நீட் தேர்வு விவகாரம்.. அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை தேசியத் தேர்வு முகமை மறுத்தது. ஆனால், இது தொடர்பாக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கைது நடவடிக்கை நடந்தது. தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகள் நடந்ததாக வெளியான புகாரையடுத்து, விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

NEET UG Row: பற்றி எரியும் நீட் தேர்வு விவகாரம்.. அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jun 2024 16:40 PM

சிபிஐ வழக்குப்பதிவு: இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கடந்த மே 5ஆம் தேதி நீட் தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி இரவே முடிவுகள் வெளியாகின. இதில், 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் பெரும் சர்ச்சையை கிளப்பியத்துடன், போராட்டத்திற்கு துண்டியது. இது சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை தேசிய தேர்வு முகமை கையாளும் விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை தேசியத் தேர்வு முகமை மறுத்தது. ஆனால், இது தொடர்பாக பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கைது நடவடிக்கை நடந்தது. தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் மற்றும் பிற முறைகேடுகள் நடந்ததாக வெளியான புகாரையடுத்து, விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நீட் தேர்வில் சில முறைகேடுகள், மோசடிகள், ஆள்மாறாட்டம் நடந்துள்ளன.

Also Read: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. காரணம் என்ன?

தேர்வு செயல்முறை வெளிப்படைத்தன்மைக்காக, கல்வி அமைச்சகம் விரிவான விசாரணைக்கு இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பொதுத்தேர்வு சட்டம்:

நீட், ஜேஇஇ, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வுகள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, பொதுத்தேர்வு சட்டம் (முறைகேடு தடுப்பு) 2024 இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சட்டத்தின்படி, மோசடியைத் தடுக்க குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். தேர்வு அலுவலர், சேவை வழங்குநர் அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் உட்பட ஒரு நபர் அல்லது ஒரு குழு குற்றத்தைச் செய்தால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீடிக்கப்படலாம். மேலும், ரூ.1 கோடிக்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: இனி லேட்டா சென்றால் அரை நாள் சம்பளம் கட்.. ஊழியர்களை அலர்ட் செய்த மத்திய அரசு!

Latest News