5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NEET: நீட் வினாத்தாள் கசிவு.. பீகாரில் 2 பேர் கைது.. அதிரடி காட்டும் சிபிஐ!

இளங்கலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் கைது நடவடிக்கை சிபிஐ மேற்கொண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிந்தது தொர்பாக சிபிஐ அதிகாரிகள் பீகார் மாநிலத்தில் இரண்டு பேரை கைது செய்தள்ளனர். இவர்கள் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

NEET: நீட் வினாத்தாள் கசிவு.. பீகாரில் 2 பேர் கைது..  அதிரடி காட்டும் சிபிஐ!
நீட் வினாத்தாள் கசிவு
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jun 2024 17:34 PM

பீகாரில் 2 பேர் கைது:  இளங்கலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் கைது நடவடிக்கை சிபிஐ மேற்கொண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிந்தது தொர்பாக சிபிஐ அதிகாரிகள் பீகார் மாநிலத்தில் இரண்டு பேரை கைது செய்தள்ளனர். இவர்கள் மணீஷ் குமார் மற்றும் அசுதோஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிபிஐ ஆதாரங்களின்படி, மணீஷ் குமார் பணம் அளித்த மாணவர்களை தனது காரில் ஏற்றிச் சென்று யாரும் இல்லாத பள்ளிக்கு அழைத்து சென்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு தேதிக்கு முன்பாக, அவர்களுக்கு வினாத்தாள் அளிக்கப்பட்டு அதில் உள்ள வினாக்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read: மருத்துவமனையில் சிகிச்சை.. எல்.கே அத்வானி உடல்நிலை எப்படி இருக்கு?

அங்கு குறைந்தது இரண்டு டஜன் மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சில மாணவர்களுக்கு தங்கும் வசதியை ஏற்பாடு செய்ததாக சிபிஐ அதிகாரிகள் கூறுகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட மணீஷ் குமார் மற்றும் அசுதோஷை விசாரணைக்காக இன்று சிபிஐ அதிகாரிகள் அழைத்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைதாகினர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 6 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சிபஐக்கு முன்னதாக சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வு முறைகேடு:

2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதாவது, இதில் வழக்கத்துக்கு மாறாக 63 பேர் முதல் மதிப்பெண் பெற்றன. மேலும், சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இப்படி, ஆள் மாற்றம், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என ஏகப்பட்ட புகார்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த முறைகேடுகள் தொடர்பாகவும், தேர்வெழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம் 1,563 மாணவர்களுக்கு வழங்கிய கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்படுவதாக என்டிஏ அறிவித்தது. இவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் 7 மையங்களில் ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணி” செங்கோல் விவகாரத்தில் முதல்வர் யோகி கண்டனம்!

 

Latest News