Drugs Ban: கால்சியம், வைட்டமின் டி3 உள்ளிட்ட 49 மாத்திரைகள் தர சோதனையில் தோல்வி.. 4 மருந்துகள் போலி என அறிவிப்பு..
மூவாயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 49 மருந்துகள் தரநிலையின்படி (NSQ) இல்லாததால், அவற்றை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரகுவன்ஷி தெரிவித்துள்ளார். மொத்த மாதிரிகளில், 1.5 சதவீத மருந்துகள் மட்டுமே குறைவான செயல்திறன் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் மருந்தின் மாதிரி தரமான தரத்தை பூர்த்தி செய்யாததால், அந்த பெயரில் விற்கப்படும் அனைத்து மருந்துகளும் தரமற்றவை என்று அர்த்தமல்ல.
பரவலாகப் பயன்படுத்தப்படும் கால்சியம் சப்ளிமெண்ட்களான ஷெல்கால் 500 மற்றும் பான் டி உள்ளிட்ட நான்கு மருந்துகளின் மாதிரிகள் போலியானவை என மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது. அதேசமயம் 49 மருந்துகளின் மாதிரிகள் தரமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டது. அல்கெம் ஹெல்த் சயின்ஸ், அரிஸ்டோ பார்மாசூட்டிகல்ஸ், கமிலா பார்மாசூட்டிகல்ஸ், இன்னோவா கேப்டன், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் இப்கா லேபரட்டரீஸ் போன்ற நிறுவனங்களின் ‘தரக் குறைபாடு’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாராசிட்டமால், பான் டி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி-3 உள்ளிட்ட 49 மருந்துகளின் மாதிரிகள் போலி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிடாஸின், மெட்ரோனிடசோல் மற்றும் ஃப்ளூகோனசோல் ஆகியவை ‘குறைபாடுள்ள தரம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
CDSCO எடுத்த நடவடிக்கை:
“Vigilant action and monitoring of drugs by #CDSCO drastically brings down the percentage of less efficacious drugs. Out of nearly 3000 samples tested, 49 drugs were asked to be recalled as they were found less efficacious (NSQ). Only nearly 1.5% of the total drugs sampled were… pic.twitter.com/ijjJRhRNrx
— All India Radio News (@airnewsalerts) October 25, 2024
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ராஜீவ் சிங் ரகுவன்ஷி கூறுகையில், “குறைந்த செயல்திறன் கொண்ட மருந்துகளின் சதவீதத்தைக் குறைக்க அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. சி.டி.எஸ்.சி.ஓ (மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு) மருந்துகளின் விழிப்புடன் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு, குறைந்த செயல்திறன் கொண்ட மருந்துகளின் சதவீதத்தில் பெரும் குறைப்புக்கு வழிவகுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ரோஹித் படைக்கு 359 ரன்கள் இலக்கு.. இதுவரை இந்திய அணி செய்த மிகப்பெரிய சேஸிங் லிஸ்ட் இதோ!
3000 மாதிரிகள் பரிசோதனை:
Central Drugs Standards Control Organisation has flagged select batches of 4 drugs as spurious. Out of nearly 3 thousand samples tested, 49 drugs were recalled as they were found less efficacious.#CDSCO | #Drugs pic.twitter.com/cRHLoVwr8x
— All India Radio News (@airnewsalerts) October 26, 2024
சுமார் மூவாயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 49 மருந்துகள் தரநிலையின்படி (NSQ) இல்லாததால், அவற்றை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரகுவன்ஷி தெரிவித்துள்ளார். மொத்த மாதிரிகளில், 1.5 சதவீத மருந்துகள் மட்டுமே குறைவான செயல்திறன் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் மருந்தின் மாதிரி தரமான தரத்தை பூர்த்தி செய்யாததால், அந்த பெயரில் விற்கப்படும் அனைத்து மருந்துகளும் தரமற்றவை என்று அர்த்தமல்ல. அந்த குறிப்பிட்ட தொகுதி மட்டுமே தரமானதாக கருதப்படுவதில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. ரோஹித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..
மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், தனது ஆகஸ்ட் அறிக்கையில், பாராசிட்டமால், பான் டி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி3 மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ‘தரத்தில் குறைபாடு உள்ளதாக’ பட்டியலிட்டுள்ளது.