5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

India Census: 2025-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 2028ல் தென் மாநிலங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடங்கும். அது 2028ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

India Census: 2025-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. 2028ல் தென் மாநிலங்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
மக்கள் தொகை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Oct 2024 10:26 AM

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்படும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோன தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்திருக்கும் நேரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு:

மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடங்கும். அது 2028ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 இல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1991, 2001, 2011ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2021ஆம் ஆண்டு கொரோனா பரவல் காணரமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 2026ஆம் ஆண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வெடித்து சிதறிய பட்டாசுகள்.. பதறி ஓடிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!

2025க்குப் பிறகு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2035, 2045, 2055 ஆக இருக்கும். தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்க பொதுவாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

31 கேள்விகள்

இந்த நிலையில், அடுத்த ஆண்டு 2025 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியப் பதிவாளர் ஜெனரலாகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் நடத்தப்படுகிறது.   மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கிறனர்.

ஆனால், இது தொடர்பான தகவல் எதுவும் வெளிவரவில்லை. கணக்கெடுப்பில் மக்களிடம் 31 கேள்விகள் கேட்கப்படும், இதில் குடும்பத்தில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை, குடும்பத் தலைவர் யார், குடும்பத்தில் எத்தனை அறைகள் உள்ளன, திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை போன்ற கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், தொலைபேசி, இணைய இணைப்பு, மொபைல், சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார் அல்லது பிற வாகனம் உள்ளதா என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும். இது தவிர குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிற கேள்விகளும் கேட்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடங்கும். அது 2028ஆம் ஆண்டுக்குள் முவடையும் என்று கூறப்படுகிறது.

சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது?

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களவை எல்லை நிர்ணயம் தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு மறுப்பது ஓபிசி சமூகத்தினருக்கு செய்யும் துரோகமாகும் என்று கூறியிருந்தார். இப்படி சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு இதற்கு மவுனம் காத்து வருகிறது.

Also Read : காலையிலேயே அதிர்ச்சி.. கேரள கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து.. 150 பேர் படுகாயம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அமித்ஷா கூறுகையில், ” மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது முடிந்தவுடன் எப்படி செயல்படும் என்பதை அறிவிப்பேன்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மொபைல் போன் பயன்பாடு மூலம் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்” என்றார்.  2011ஆம் ஆண்டு 640 மாவட்டங்கள், 7,935 நகரங்கள் மற்றும் 6,00,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்தியாவில் 121 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது என்று கூறப்பட்டது.

Latest News