Maternity leave: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாலும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
நாட்டில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் (6 மாதம்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தப்பட்ட மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972-ன் கீழ் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
6 மாதம் மகப்பேறு விடுப்பு: கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து பெற்று கொடுப்பவரையே வாடகைத் தாய் என்று அழைக்கப்படுவார். நாட்டில் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் (6 மாதம்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தப்பட்ட மத்திய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972-ன் கீழ் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Also Read: கெஜ்ரிவாலுக்கு தொடர் சிக்கல்.. ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்!
Big Decision for mother who gives birth to a child through surrogacy and the parents who adopt those children
Now in cases of surrogacy, the surrogate, a central government employee, will be able to get 180 days of maternity leave
Along with the surrogate, the presiding mother,… pic.twitter.com/WrFnMf0PTU
— DD News (@DDNewslive) June 23, 2024
அதேபோல, வாடகை தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையை பெறும் தாய் என இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அரசு ஊழியராக இருந்து, இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 180 நாட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெறும் தந்தை, குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் 15 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.
விதிகள் என்ன?
வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கணவன் அல்லது மனைவி யாராவது குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாதபடி மருத்துவ குறைபாடு இருந்தாரல், அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். யாருக்கு குறைபாடு இருக்கிறது என்பதை மாவட்ட வாரியம் சான்று அளித்தபின் தான், விந்தணுவையோ, கருமுட்டையையோ தானமாக பெற முடியும். அதேபோல, கைம்பெண்ணாக ஒருவர் இருந்தாலோ, விவாகரத்து ஆனவராக இருந்தாலோ அவரது சொந்த கருமுட்டையையும், தானாம பெற்ற விந்தணுவையும் பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற விரும்பும் தம்பதியினர் கருமுட்டையே அல்லது விந்தணுக்களோ என எதாவது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது பேன்று சமீபத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
Also Read: “வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்” எம்.பியாக பதவியேற்ற ராகுல் காந்தி.. உற்று கவனித்த பாஜக!