5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Zika Virus: மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் ‘ஜிகா’ வைரஸ்.. அனைத்து மாநிலங்களுக்கு அலர்ட் கொடுத்த மத்திய அரசு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாராத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 46 வயதான மருத்துவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு ரத்த மாதிரி ஆய்வு எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

Zika Virus: மகாராஷ்டிராவில் தீயாய் பரவும் ‘ஜிகா’ வைரஸ்.. அனைத்து மாநிலங்களுக்கு அலர்ட் கொடுத்த மத்திய அரசு!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jul 2024 17:38 PM

ஜிகா வைரஸ்: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாராத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 46 வயதான மருத்துவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு ரத்த மாதிரி ஆய்வு எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அடுத்து ஜூலை 1ஆம் தேதி இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 6 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜிகா என்பது டெங்கு, சிக்குன்குனியா போன்ற ஏடிஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் நோயாகும்.

இந்த தொற்றால் எந்த மரணமும் ஏற்படாத எனவும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு தலை சிறியதாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.   இந்த நிலையில், ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாராத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Also Read: “ரிமோட் கண்ட்ரோல் அரசு” மாநிலங்களவையில் சோனியா காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

மத்திய அரசு அறிவுறுத்தல்:

அந்த அறிக்கையில், “ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணி பெண்கள் தொற்றுநோய் பரிசோதனை மற்றும் கரு வளர்ச்சி கண்காணிப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏடிஸ் கொச மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உணவு வழங்குபவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கரு வளர்ச்சி கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

கொசுக்கள் உற்பத்தி ஆகுவதை தடுக்கும் வகையில், குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள், கட்டுமானத் தளங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், தோல், வெடிப்பு, தலைவலி, கண் இமைகளில் வீக்கம், தசை மற்றும் மூட்டுவலி உள்ளிட்ட அறிகுறிகள் 2 முதல் 7 நாட்கள் வரை இருந்தால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும். ஜிகா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும். மருத்துகளை இருப்பில் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வாய் திறந்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?