Chandipura Virus: இந்தியாவில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு.. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..
சண்டிபுரா வைரஸ் வைரஸ் பெண் ஃபிளெபோடோமைன் சாண்ட்ஃபிளை மூலம் பரவுகிறது, இது பருவமழையின் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். செர்ஜென்டோமியா சாண்ட்ஃபிளைகள் வைரஸின் பரவலில் இது முக்கிய பங்கு வகிக்கின்றன.
சண்டிபுரா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் (WHO) சமீபத்தில் இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளதாக கண்டறிந்துள்ளது. பிடிஐ அறிக்கையின்படி, ஜூன் தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை, சுகாதார அமைச்சகம் மூளை அழற்சி நோயால் (AES) 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 82 பேர் உயிரிழந்ததாகவும், இதன் விளைவாக 33% இறப்பு விகிதம் ஏற்பட்டதாகும் குறிப்பிட்டுள்ளதுu. இந்தியா முழுவதும் 43 மாவட்டங்களில் மூளையழற்சி நோய்க்குறி வழக்குகள் தற்போது பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 245 பேரில் 63 பேருக்கு சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
CHPV ஆனது Rhabdoviridae குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் இது இந்தியாவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில், குறிப்பாக மழைக்காலத்தில் AES இன் ஆங்காங்கே வழக்குகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. முந்தைய வெடிப்புகளைப் போலவே பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குகள் அவ்வப்போது உள்ளன. குஜராத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை CHPV நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் முன் ஜாமின் கேட்ட வழக்கு: இன்று மீண்டும் விசாரணை..
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக கவனிக்க வேண்டும் என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தில் AES இன் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 329 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 183 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மணல் ஈக்கள் (sandflies) மற்றும் கொசுக்களால் பரப்பப்படுகிறது. இந்த கொசு வகைகளில் ஏடிஸ் ஈஜிப்டியும் அடங்கும். ஏடிஎஸ் கொசு டெங்குவை பரப்புவதற்கு காரணமாக உள்ளது. இந்த பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் தங்கியுள்ளது. இது நம்மை கடிக்கும் போது அந்த உமிழ்நீர் சுரபிகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த தொற்று மூளையழற்சி மற்றும் மூளையின் செயலில் உள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!
இந்த வைரஸ் பெண் ஃபிளெபோடோமைன் சாண்ட்ஃபிளை மூலம் பரவுகிறது, இது பருவமழையின் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். செர்ஜென்டோமியா சாண்ட்ஃபிளைகள் வைரஸின் பரவலில் இது முக்கிய பங்கு வகிக்கின்றன.
காய்ச்சல், வாந்தி, மாற்றப்பட்ட மன நிலை, வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் குறைபாடுகள் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த வைரஸ் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர். எனவே நோய் அறிகுறி ஏறபட்ட உடனே இதறகான சிகிச்சைகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.