5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chandipura Virus: குழந்தைகளை தாக்கும் சண்டிபுரா வைரஸ்.. அறிகுறிகள் என்ன?

சண்டிபுரா வைரஸ் மூளையழற்சி மற்றும் மூளையின் செயலில் உள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கும். வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்த சண்டிபுரா வைரஸ், 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களின் இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பெண் ஃபிளெபோடோமைன் சாண்ட்ஃபிளை மூலம் பரவுகிறது

Chandipura Virus: குழந்தைகளை தாக்கும் சண்டிபுரா வைரஸ்.. அறிகுறிகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 21 Jul 2024 14:02 PM

சண்டிபுரா வைரஸ்: குஜராத்தில் பரவி வரும் சண்டிபுரா வைரஸால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சண்டிபுரா வைரஸ் என்பது ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும், இதில் ரேபிஸ் அடங்கும். இது மணல் ஈக்கள் (sandflies) மற்றும் கொசுக்களால் பரப்பப்படுகிறது. இந்த கொசு வகைகளில் ஏடிஸ் ஈஜிப்டியும் அடங்கும். ஏடிஎஸ் கொசு டெங்குவை பரப்புவதற்கு காரணமாக உள்ளது. இந்த பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் தங்கியுள்ளது. இது நம்மை கடிக்கும் போது அந்த உமிழ்நீர் சுரபிகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

Also Read:  27 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

இந்த தொற்று மூளையழற்சி மற்றும் மூளையின் செயலில் உள்ள திசுக்களின் வீக்கத்திற்கு வழிவகுக்கும். வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்த சண்டிபுரா வைரஸ், 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களின் இரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பெண் ஃபிளெபோடோமைன் சாண்ட்ஃபிளை மூலம் பரவுகிறது, இது பருவமழையின் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும். செர்ஜென்டோமியா சாண்ட்ஃபிளைகள் வைரஸின் பரவலில் இது முக்கிய பங்கு வகிக்கின்றன.

காய்ச்சல், வாந்தி, மாற்றப்பட்ட மன நிலை, வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் குறைபாடுகள் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த வைரஸ் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர்.


குஜராத்தில் அதிகரித்து வரும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்த ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல், மாநிலம் முழுவதும் இதுவரை சண்டிபுரா வைரஸால் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 16 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஹிம்மத்பூரில் 14 சண்டிபுரா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூக சுகாதார நிலையங்களிலும் விழ்ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” எனவும் கூறியுள்ளார்.

Also Read: வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்.. இந்த பிரச்சனைகளை தரும்!

Latest News