AP CM Swearing in Ceremony: சந்திரபாபு நாயுடு 4.0.. ஆந்திர முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார்!
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக இன்று பதவியேற்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சீவ் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு: ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆந்திராவில் 21 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக இன்று பதவியேற்றார்.
#WATCH | Prime Minister Narendra Modi attends the swearing-in ceremony of TDP chief & Andhra Pradesh CM-designate N Chandrababu Naidu, in Vijayawada. pic.twitter.com/46jaEAqFbr
— ANI (@ANI) June 12, 2024
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சீவ் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு பதவிறேப்பை தொடர்ந்து 24 அமைச்சர்களும் பதவியேற்றனர். குறிப்பாக நடிகரும், ஜனசோன கட்சி தலைவருமான பவன் கல்யாண் அமைச்சராக பதவியேற்றார். 24 அமைச்சர்களில் ஐனசேனா கட்சியைச் சேர்ந்த 3 பேரும், பாஜகவைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பவன் கல்யாண், நாதெண்டலா மனோகர், கந்துலா துர்கேஷ் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். பாஜக சார்பில் சதய் குமார் அமைச்சராக பதவியேற்றார்.
#WATCH | Vijayawada: Andhra Pradesh Chief Minister, N Chandrababu Naidu hugs Prime Minister Narendra Modi, after taking the oath. pic.twitter.com/35NLmYvF0q
— ANI (@ANI) June 12, 2024
சந்திரபாபு நாயுடு தவிர்த்து 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 8 பேர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர், பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நாடாளுமன்ற கூட்டம்.. எப்போது தொடங்குகிறது?