மத்திய அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபு நாயுடு கேட்பது என்ன? வளைந்து கொடுக்குமா பாஜக?

கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. 13 சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்து இருப்பதால், ஏன்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற இருகட்சிகளும் முனைப்பு காட்டி வருகிறது.

மத்திய அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபு நாயுடு கேட்பது என்ன? வளைந்து கொடுக்குமா பாஜக?

என்டிஏ கூட்டணி

Updated On: 

07 Jun 2024 11:35 AM

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம், ஜக்கிய ஜனதா ளதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியை அமைக்க உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 16 எம்.பிக்களுடன் தெலுங்கு தேசம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல, 12 எம்.பிக்களுடடுன் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளன. நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் என்டிஏவின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. 13 சிட்டிங் அமைச்சர்கள் தோல்வி அடைந்து இருப்பதால், ஏன்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற இருகட்சிகளும் முனைப்பு காட்டி வருகிறது.

Also Read: ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

சந்திரபாபு நாயுடு கேட்பது என்ன?

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து, தெலுங்குதேசம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைத்தன. மொத்தமுள்ள 25 இடங்களில் தெலுங்கு தேசம் 16, பாஜக 3, ஜனசேனை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால், அதிகப்படியான கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன்வைக்கிறார். குறிப்பாக, ஐந்து மத்திய அமைச்சர் இலாக்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாலை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நிதித்துறை, உள்துறை போன்றவற்றை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சபாநாயகர் பொறுப்பும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நிதித்துறை, உள்துறை, ரயில்வே ஆகிய துறைகளை தவிர கேட்கலாம் பாஜக சொல்லி வருவதாக தெரிகிறது.

நிதிஷ் குமார் கேட்பது என்ன?

பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் கை ஓங்கியிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகளை நிதிஷ்குமார் கேட்கிறார். அதாவது, ரயில்வே, ஊரக மேம்பாடு, வேளாண்மை, நீர்வளம், கனரக தொழிலகங்கள் போன்ற துறைகளை நிதிஷ் குமார் கேட்பதாக தெரிகிறது. மேலும், சபாநாயகர் பதவியையும் கேட்கிறார் என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பதவிகளுக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, ராஜீவ் ரஞ்சன் சிங், மண்டல், லவ்லி ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: ரேபரேலி, வயநாடு; இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி: எதை ராஜினாமா செய்வார்? அடுத்து என்ன?

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!