சபாநாயகர் பதவிக்கு போட்டா போட்டி.. விழிபிதுங்கும் பாஜக!

மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் சில நிபந்தனைகளை விதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களுக்கு சபாநாயர் பதவி வழங்க வேண்டும் என நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய வேண்டும் ஆகிய இருவருமே பாஜக தலைமையை வலியுறுத்தி வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

சபாநாயகர் பதவிக்கு போட்டா போட்டி.. விழிபிதுங்கும் பாஜக!

நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு

Updated On: 

05 Jun 2024 12:52 PM

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், மொத்துமுள்ள 542 இடங்களில் 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. I.N.D.I.A கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  இதனால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக கூட்டணி அல்லது I.N.D.I.A  கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்.  ஏனென்றால் பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 6 இடங்களிலும் வென்றன. இதனால், இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. அதேநேரம் I.N.D.I.A கூட்டமும் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Also Read: பிரதமர் வேட்பாளர் யார்? ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.. டெல்லியில் பரபர!

சபாநாயகர் பதவிக்கு போட்டா போட்டி

இந்த கூட்டத்தில் யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்ய இது முக்கியமானதாக இருக்கும். யார் ஆட்சியை அமைக்கப்போகிறார்கள் என்று தீர்மானப்பதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் சில நிபந்தனைகளை விதிப்பதாக தெரிகிறது. தங்களுக்கு சபாநாயர் பதவி வழங்க வேண்டும் என நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய வேண்டும் ஆகிய இருவருமே பாஜக தலைமையை வலியுறுத்தி வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவதாகவும் தெரிகிறது. மேலும், ஆந்திராவின் முதலமைச்சராக அவரது மகன் நரேஷை அமர்த்திவிட்டு சந்திரபாபு நாயுடு சபாநாயகராக அல்லது துணை பிரதமர் பதவி வழங்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், எந்ந நிபந்தைகளுக்கு பாஜக செவி சாய்க்கும் என்பது இன்றுக்குள் தெரிந்துவிடும்.

Also Read: பாஜகவா, I.N.D.I.A-வா? சந்திரபாபு நாயுடு அளித்த பரபரப்பு பதில்!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!