Chandrababu Naidu: 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் சீட்.. சந்திரபாபு நாயுடு அதிரடி!
அமராவதி தலைநகர் கட்டுமானப் பணிகளின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் மக்கள் தொகை பெருக்கத்தின் அவசியம் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்தார். அதாவது நாட்டின் நிலைமையைப் பார்த்தால் வரும் நாட்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் சதவீதம் குறையும் அபாயம் உள்ளது என கூறினார். மேலும் இந்திய நாட்டின் நலன் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் தொகை பெருக்கத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் குழந்தைகள் பிறப்பு சதவிகிதம் குறைந்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள யோசனை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அமராவதி தலைநகர் கட்டுமானப் பணிகளின் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் மக்கள் தொகை பெருக்கத்தின் அவசியம் குறித்து சுவாரஸ்யமான கருத்துகளை தெரிவித்தார். அதாவது நாட்டின் நிலைமையைப் பார்த்தால் வரும் நாட்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் சதவீதம் குறையும் அபாயம் உள்ளது என கூறினார். மேலும் இந்திய நாட்டின் நலன் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் தொகை பெருக்கத்திற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என கூறினார். இதனால் அந்நிகழ்ச்சியில் சிரிப்பலை எழுந்தது.
மீண்டும் தொடங்கப்படும் திட்டங்கள்
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அதேசமயம் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதலமைச்சராக பவன் கல்யாணும் பதவி வகித்து வருகின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்த ஹைதராபாத் தெலங்கானாவுக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்து அதற்கான உள்கட்டமைப்பு திட்டங்களையும் செயல்படுத்தினார். ஆனால் அடுத்ததாக பதவியேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அதனை விரும்பாமல் அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.
இதனிடைய மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சந்திரபாபு நாயுடு அமராவதி திட்டம் உள்ளிட்ட கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களை கையில் எடுத்துள்ளார். அதன் தொடக்க விழா தான் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆந்திர மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் முதியவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த கிராமங்களில் வசித்த இளைஞர்கள் பலரும் வேலை அமைத்தமாக வெளிநாடு. வெளி மாநிலங்கள் என பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து தான் மக்கள் தொகை குறைந்ததற்கு காரணமாக உள்ளது.
1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் குறைந்த பிறப்பு சதவீதம் சராசரி என்பது 6.2 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு 2.1 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆந்திராவை எடுத்துக் கொண்டால் இங்கு குழந்தை பிறப்பு சதவீத சராசரி 1.6 என்ற அளவில் தான் இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவுக்கு 2047 வரை தான் நன்மை கிடைக்கும். அதன் பின்பு இங்கு இளைஞர்களை விட முதியவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
ஜப்பான், சீனா, ஐரோப்பாவில் இருக்கும் நிலைமையைப் போன்ற சூழல் இங்கு நிலவுகிறது. அதனால் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது மக்களாகிய உங்கள் பொறுப்பு என்பதை மறக்காதீர்கள். இதனை உங்களுக்காக நீங்கள் செய்ய வேண்டாம். நாட்டின் நலனுக்காகவும், சமூக சேவை எனவும் நினைத்து செய்ய வேண்டும். நான் ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்தேன். மக்கள் தொகை அதிகரித்தால் தண்ணீர், உணவு ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என பயந்தேன்.
Also Read: Ginger Benefits: ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இஞ்சி.. பாலியல் சக்தியை அதிகரிக்கும்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தேன். நான் சொன்னதைக் கேட்டு கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திராவில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது நம் மாநிலத்தில் இளைஞர்கள் இல்லையே என்ற பயம் என்னிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு யோசித்து வருகிறது” என தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி உள்ளது.