பாரம்பரியமா? குழந்தை திருமண சட்டமா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Tamil News | child marriage probhition act supreme court issues guidliness tamil news | TV9 Tamil

பாரம்பரியமா? குழந்தை திருமண சட்டமா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Supreme Court: நாட்டில் குழந்தை திருமண சட்டத்தை திறம்பட செயல்படுத்த உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.  குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு  தீர்ப்பு வழங்கியுள்ளது.  குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்டத்தை தனிநபர்களுக்கு உரிமை தரும் சட்டங்களால் தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பாரம்பரியமா? குழந்தை திருமண சட்டமா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

உச்ச நீதிமன்றம் (image credit: Getty)

Updated On: 

18 Oct 2024 15:15 PM

நாட்டில் குழந்தை திருமண சட்டத்தை திறம்பட செயல்படுத்த உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.  குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு  தீர்ப்பு வழங்கியுள்ளது.  நாட்டில் 2006ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் முன்பு இருப்பது போன்ற தற்போது இல்லை. இருப்பினும், குழந்தை திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

இதற்கிடையில், குழந்தை திருமணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, அதன்படி, குழந்தை திருமண சட்டத்தை தனி சட்டங்களாலோ பாரம்பரியத்தாலோ கட்டுப்படுத்த முடியாது. குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்டத்தை தனிநபர்களுக்கு உரிமை தரும் சட்டங்களால் தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குழந்தை திருமணங்கள வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளளது.  உச்ச நீதிமன்றம் தலைமை நீதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழஙகியுள்ளது.

Also Read: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்.. என்ன தெரியுமா?

மேலும், “வெவ்வெறு சமூகங்களுக்கு ஏற்றுவாறு பல்வேறு உத்திகளை கையாண்டு குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும்.  பல துறைகளின் ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே சட்டம் வெற்றி பெறும். இதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் சிறார்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.  அதே நேரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை தேவை. நாட்டில் தனிநபர் சட்டம் தனக்கு விருப்பமான துணையடன் இணைந்து வாழ அனுமதிக்கிறது.

ஆனால் இந்த சட்டம் குழந்தை திருமணங்களை தடுக்கும் சட்டத்தை மீற முடியாது.  குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தில் சில குறைகள் உள்ளது. அதை அரசு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

குழந்தை திருமண தடுப்பு சட்டம்:

நாட்டில் குழந்தை திருமணங்களை தடுக்க 2006ஆம் தேதி குழந்தை திருமண தடுப்பு சட்டம் அமலுக்கு வந் வந்தது. இந்த சட்டத்தின்படி, 18 வயது முடிந்தால் மட்டுமே பெண்கள் திருமணம் செய்ய முடியும். அதேபோல, ஆண்களுக்கு 21 வயது இருக்க வேண்டும். இந்த வயது நிறைவடையாமல் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணமாக கருதப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு 2 ஆண்டு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது.

Also Read: மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித் தூக்கிய நிகிதா போர்வால்… யார் இந்த பேரழகி?

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களுக்கு குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?