Childrens Day 2024 : குழந்தைகள் தினம் உருவானது எப்படி? முக்கியத்துவம் என்ன? - Tamil News | childrens day 2024 history significance and how it is celebrated | TV9 Tamil

Childrens Day 2024 : குழந்தைகள் தினம் உருவானது எப்படி? முக்கியத்துவம் என்ன?

Updated On: 

14 Nov 2024 15:21 PM

குழந்தைகள் தினம் 2024: இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த தினம் எப்படி உருவானது? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1 / 5ஒவ்வொரு

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். குழந்தைகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படியே தான், இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இந்த தினம் எப்படி உருவானது? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

2 / 5

குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர் ஜவஹர்லால் நேரு. அதனால் அவரை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என்று அழைத்தனர். இதனால் அவரின் நினைவாகவும் அவரின் பிறந்த நாள் தினத்தை குழந்தைகள் தினம் என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 1964ஆம் ஆண்டு ஐவஹர்லால் நேரு மறைந்த பிறகு அவர் குழந்தைகள் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்ததை போற்றும் வகையில் அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரின் பிறந்த நாளன்று குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

3 / 5

ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 20ஆம் தேதி உலகளாவிய குழந்தைகள் தினமாக அறிவித்தது. இருப்பினும், 1964ஆம் ஆண்டு ஐவஹர்லால் நேரு மறைந்த பிறகு, இந்திய அரசு அவருடைய பிறந்தநாளை நினைவுக் கூறும் வகையில், நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக மாறியது. அதில் இருந்து ஒவ்வொரு ஆணடும் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

4 / 5

குழந்தைகள் தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நேருவைப் போல் வேடமிட்டு குழந்தைகள் நேருவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். அந்த நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பிரதமர்கள் பற்றி பேச்சுப் போட்டி, நாடகம் ஆகியவை பல பள்ளிகளில் நடத்தப்படும். இப்படியாக பள்ளிகளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும்.

5 / 5

ஒரே நொடியில் கோபங்கள் தணிக்கும்பெரும் சக்தி கொண்ட பிறவி குழந்தைகள். குழந்தைகள் தின வாழ்த்துகள். பெற்றோர்களின் வலிகளை ஒற்றை சிரிப்பில் போக்கும் குழந்தைகள்.. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நீ.. குழந்தைகள் தின வாழ்த்துகள் என போன்றவற்றை கூறி உங்கள் குழந்தைகளுக்கு இன்றைய நாளில் வாழ்த்து கூறி கொண்டாடுங்கள்.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ