Chittoor Road Accident: லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து.. 8 பேர் உயிரிழப்பு.. சித்தூரில் அதிர்ச்சி! - Tamil News | Chittoor road accident in Andhra Pradesh, bus collided with a lorry several killed reported | TV9 Tamil

Chittoor Road Accident: லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து.. 8 பேர் உயிரிழப்பு.. சித்தூரில் அதிர்ச்சி!

Updated On: 

13 Sep 2024 17:51 PM

ஆந்திராவில் லார்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு லாரிகள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Chittoor Road Accident: லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து..  8 பேர் உயிரிழப்பு.. சித்தூரில் அதிர்ச்சி!

விபத்து (Picture Credit: Twitter)

Follow Us On

சித்தூரில் கோர விபத்து: ஆந்திராவில் லார்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு லாரிகள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு-திருப்பதி நெடுஞ்சாலையில் பலமனேருவில் இருந்து திருப்பதிக்கு சென்ற ஆர்டிசி லாரிகள் மீது பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மொகிலி காட் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

Also Read: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஜாமீன்.. குஷியான தொண்டர்கள்!

விபத்து நடந்தது எப்படி?

திருப்பதி அலிபிரி டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து, பெங்களூரு நோக்கி தேசிய நெடுச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது லாரி மீது பேருந்து திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து பின்னால் வந்த மற்றொரு லாரியும் மோதியது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்று பெங்களூரு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், பங்காருபாலம் மற்றும் பலமனேரில் இருந்து 4 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்தது. இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் பலமனேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், நிலைமையை நேரில் பார்வையிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடரும் சாலை விபத்துகள்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள  டி நரசாபுரம் மண்டலம் பகுதியில் உள்ள பொர்ரம்பாளையம் என்ற இடத்திலிருந்து முந்திரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நிடதவொலு மண்டலத்தில் உள்ள தாடி மல்லா என்ற இடத்தை நோக்கி அதிகாலை மினி லாரி என்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் மூட்டைகளுடன் சேர்த்து 9 கூலி தொழிலாளிகளும் பயணப்பட்டு வந்தனர். இந்த மினி லாரி தேவாரப்பள்ளி மண்டலத்தில் உள்ள சின்னைகுடம் பகுதியில் வந்த போது வழியில் பள்ளம் ஒன்று இருந்ததை டிரைவர் கவனித்துள்ளார்.

Also Read: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அதிர்ச்சி கொடுத்த மம்தா.. மேற்கு வங்க அரசியலில் ட்விஸ்ட்!

உடனடியாக வண்டியை பள்ளத்தில் இறங்காமல் இருக்க திருப்பியபோது அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அதே பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த 9 தொழிலாளர்களில் ஏழு பேர் முந்திரி மூட்டைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!
Tirupati Laddu Controversy: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?
Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!
Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பா? பகீர் கிளப்பிய சந்திரபாபு நாயுடு.. என்ன நடக்கிறது?
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version