5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CJI DY Chandrachud: மத்திய அரசுக்கே சவால்.. ஓய்வு பெற்றார் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் !

Chief Justice of India: நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தந்தை மற்றும் மகன் ஆகியோர் இருந்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை டி.ஒய்.சந்திரசூட் முறியடித்தார். அவரது தந்தை சந்திரசூட் சீனியர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்து புகழ்பெற்ற நீதிபதியாக இன்றும் நீதித்துறையில் திகழ்கிறார். டி.ஒய்.சந்திரசூட் பற்றி கூற வேண்டுமென்றால் 2018 ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிடலாம்.

CJI DY Chandrachud: மத்திய அரசுக்கே சவால்.. ஓய்வு பெற்றார் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் !
டி.ஒய்.சந்திரசூட் (கோப்பு புகைப்படம்)
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Nov 2024 15:47 PM

டி.ஒய்.சந்திரசூட்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கடைசி நாளில் பணிகளை முடித்து புறப்பட்ட அவருக்கு சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் சிறப்பான பிரியாவிடை அளித்தனர். நவம்பர் 10 ஆம் தேதி அவருக்கு விதிகளின்படி பணியின் கடைசி நாளாகும். உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் 11 ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதனிடையே உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்ற சிறப்புக்கு சொந்தக்காரரான டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி பதவியேற்றார். கடந்த 14 ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றியதில்லை என்ற வரலாற்றை இவர் மாற்றி எழுதினார். அதேசமயம் அடுத்த தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா  2025 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறுவார்.

Also ReadElon Musk : டிரம்ப் வெற்றி எதிரொலி.. அதிரடியாக உயர்ந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

டி.ஒய்.சந்திரசூட் எழுதிய முக்கிய தீர்ப்புகள்

நீதித்துறை வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தந்தை மற்றும் மகன் ஆகியோர் இருந்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை டி.ஒய்.சந்திரசூட் முறியடித்தார். அவரது தந்தை சந்திரசூட் சீனியர் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்து புகழ்பெற்ற நீதிபதியாக இன்றும் நீதித்துறையில் திகழ்கிறார். டி.ஒய்.சந்திரசூட் பற்றி கூற வேண்டுமென்றால் 2018 ஆம் ஆண்டிலிருந்தே குறிப்பிடலாம்.

ஆண் பெண் திருமண உறவு குறித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. அதாவது ஆண் அல்லது பெண் யார் தங்கள் வாழ்க்கை துணையாக தேர்வு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் தலையிட அரசு, காவல்துறை மற்றும் பெற்றோர்களுக்கு கூட உரிமை கிடையாது என அந்த தீர்ப்பு எழுதப்பட்டது. இந்த நீதிபதி அமர்வில் டி.ஒய்.சந்திரசூட் இருந்தார்.

Also Read: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.. யார் இவர்?

அதன் பின்னர் தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு தெரிவித்திருந்தது. அதற்கு எதிரான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இதிலும் டி.ஒய்.சந்திரசூட் சந்திரசூட் இடம்பெற்றிருந்த நிலையில் அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதே வருடத்தில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் அவர் இடம் பெற்றிருந்தார். அந்த தீர்ப்பில் 10 முதல் 50 வயது உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதியை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ராமர் கோயில் தீர்ப்பு, அருணா  கோஸ்வாமி ஜாமீன் வழக்கு, ன தலைமை நீதிபதியாக பொறுப்பதற்கு முன்பு வரலாற்றில் எழுதப்பட்ட நீதித்துறை தீர்ப்புகளில் எல்லாம் டி.ஒய். சந்திரசூட் பெயர் தவறாமல் இடம்பெற்று இருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பிறகு..

இப்படியான நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றார். பாஜக தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திரம் கொண்டு வந்த நிலையில் அது சட்ட விரோதமானது எனக் கூறி அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் தேர்தல் பத்திர நடைமுறை வழியாக கட்சிகள் சம்பாதித்த பணம் பற்றிய தகவல் வெளிவந்து பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி அரசுக்கும் மாநிலத்தின் துணைநிலை ஆளுநருக்கு இடையேயான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியாக உள்ள துணைநிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கி மத்திய அரசுக்கே அதிர்ச்சியளித்தார். இப்படி பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளுக்கு டி.ஒய்.சந்திரசூட் உள்ளார்.

இதனிடையே பதவி ஓய்வு பெறும் நேரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தன் வீட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்து வந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனாலும் இது ஒரு பொது நிகழ்ச்சி அல்ல. குடும்ப நிகழ்ச்சி என விளக்கமும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News