CJI DY Chandrachud: எதிர்காலம் பற்றிய அச்சம் உள்ளது.. தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு! - Tamil News | CJI DY Chandrachud says my mind has been heavily preoccupied with fears and anxieties | TV9 Tamil

CJI DY Chandrachud: எதிர்காலம் பற்றிய அச்சம் உள்ளது.. தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு!

உச்சநீதிமன்ற வரலாற்றில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற சிறப்பையும் டி.ஒய். சந்திரசூட் பெற்றுள்ளார். அவரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10  ஆம் தேதி  முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார். பொதுவாக தலைமை நீதிபதி 65 வயதை எட்டியதும் ஓய்வு பெறுவார் என்பதால் சஞ்சீவ் கண்ணா அடுத்தாண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறுவார். 

CJI DY Chandrachud: எதிர்காலம் பற்றிய அச்சம் உள்ளது.. தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Oct 2024 17:40 PM

உச்சநீதிமன்றம்:  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (CJI) பதவி வகித்து வரும் டி.ஒய். சந்திரசூட் இன்னும் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் தன்னுடைய பதவி காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தனது பதவிக் காலத்தை எதிர்காலம் எப்படி தீர்மானிக்கும், எதிர்கால சந்ததியினருக்கு தான் விட்டுச் செல்லும் பாரம்பரியம் என்ன என்பதைப் பற்றிய சிந்தனையில் தனது மனம் மூழ்கியிருப்பதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சந்திரசூட் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் உச்சநீதிமன்றத்தின் 50வது நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றார்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற சிறப்பையும் டி.ஒய். சந்திரசூட் பெற்றுள்ளார். அவரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10  ஆம் தேதி  முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார். பொதுவாக தலைமை நீதிபதி 65 வயதை எட்டியதும் ஓய்வு பெறுவார் என்பதால் சஞ்சீவ் கண்ணா அடுத்தாண்டு மே மாதத்துடன் ஓய்வு பெறுவார். 

Also Read: இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்!

இதனிடையே பூட்டானில் உள்ள பாரோவில் உள்ள JSW சட்டப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ நம் நாட்டிற்காக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, நடப்பாண்டு நவம்பரில் நான் இந்திய தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகுகிறேன். எனது பதவிக்காலம் முடிவடைவதால், என் மனதில் எதிர்காலம்  பற்றிய அச்சம் மற்றும் கவலைகள் அதிகமாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என நினைத்ததை அடைந்தேனா?, எனது பதவி காலத்தை வரலாறு எவ்வாறு தீர்மானிக்கும்?, நான் ஏதாவது வித்தியாசமாக செய்திருக்கலாமா?, என்னுடைய எதிர்கால சந்ததியினருக்கு நான் என்ன விட்டு செல்லவுள்ளேன்? என  தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியுள்ளார்.

மேலும் இந்த கேள்விகளில் பெரும்பாலானவற்றிற்கான பதில்கள் தன்னிடம் இல்லை என சொன்ன அவர், இந்திய நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்ததில் தான் என்னுடைய திருப்தி உள்ளது என்றும் தலைமை நீதிபதி  சந்திரசூட்  கூறியுள்ளார். மேலும் இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவற்றிற்கான பதில்கள் என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக உள்ளது.  சொல்லப்போனால் இந்தக் கேள்விகளில் சிலவற்றிற்கான பதில்களை நான் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.

ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நான் தினமும் காலையில் எழுந்ததும், இன்றைய வேலைக்கான அர்ப்பணிப்பை முழுவதுமாக வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். நான் எனது நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்தேன் என்ற மனநிறைவுடன் நான் உறங்கச் செல்கிறேன். இதில் தான் எனக்கான ஆறுதலை தேடுகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் திறன்களின் மீது  தெளிவான நம்பிக்கை இருந்தால், அதன் விளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம்.  நீங்கள் செயல்முறை மற்றும் இந்த விளைவுகளை நோக்கிய பயணத்தை மதிப்பிட ஆரம்பிக்கிறீர்கள்” என்று தலைமை நீதிபதி கூறினார்.

Also Read: Udhayanidhi Stalin: சங்கிகளைப் பார்த்து பரிதாபம் வருகிறது.. உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

மேலும்  தனது உரையில், நமது சமூகங்களின் பாரம்பரிய விழுமியங்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் கருத்து வேறுபாடு போன்ற நவீன ஜனநாயகக் கருத்துக்களுக்கு எதிரானவை என்ற தவறான கருத்து அடிக்கடி நிலவுகிறது. ஆனால், ஆசியாவில் உள்ள நமது சமூகங்களின் வரலாற்றை உணர்ச்சிவசப்படாமல் பார்ப்பது பெரும்பாலும் வித்தியாசமான பதிலை அளிக்கிறது” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இளைஞர்களாக இருக்கும் போது, ​​உலகில் நடக்கும் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசையில் அவர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலும் அது அனுபவமின்மை, நிச்சயமற்ற தன்மை  ஆகியவற்றால்  இருக்கும் என்றும் சந்திரசூட் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் கூறினார்.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version