உத்தர பிரதேசத்தில் பதற்றம்.. அதிகாரிகள் மீது கல்வீச்சு.. மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்!

Uttar Pradesh Violence: உத்தர பிரசேத மாநிலத்தில் உள்ள ஷாஜி ஜமா மசூதியில் ஆய்வு நடந்த சென்ற அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பதற்றம்.. அதிகாரிகள் மீது கல்வீச்சு.. மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்!

உத்தர பிரதேசத்தில் கலவரம்

Updated On: 

24 Nov 2024 16:25 PM

உத்தர பிரசேத மாநிலத்தில் உள்ள ஷாஜி ஜமா மசூதியில் ஆய்வு நடந்த சென்ற அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற இடத்தில் இந்த மோதல் வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அயோத்தி பாபர் மசூதி போலவே வட மாநிலங்களில் உள்ள பல மசூதிகளை இந்துத்துவா அமைப்பினர் தங்களுக்கு சொந்தமானது என்று கூறியும், கோயிலை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது என்றும் சர்ச்சைகுரிய வகையில் பேசி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் பதற்றம்

அந்த வகையில், உத்தர பிரசேத மாநிலத்தில் உள்ள ஷாஜி ஜமா மசூதி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, இந்து கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், முகலாயப் பேரரசர் பாபர் காலத்தில் ஷாஹி மசூதி இருந்த இடத்தில் இருந்த ஹரிஹர் மந்திர் என்ற கோயிலை இடிக்கப்பட்ட பின்பு தான் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் விஷ்ணு சங்கர் ஜெயின் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் நீதிமன்றம், ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக கடந்த 19ஆம் தேதி தொல்லியல் துறை அதிகாரிகள் சென்றனர்.

Also Read : தனக்கு தானே சிலை திறப்பு.. மேற்கு வங்க ஆளுநர் செய்த சம்பவம்..!

அதிகாரிகள் கல்வீச்சு.. வாகனங்கள் ஏரிப்பு


இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு குழு ஷாஹி ஜமா மசூதிக்கு வந்து ஆய்வு நடத்தி இருக்கிறது.  அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.  மசூதிக்குள் தொல்லியல் துறை அதிகாரிகள் சர்வே பணி செய்து கொண்டிருக்கும்போது ஒரு கூட்டம் மசூதிக்கு வெளியே திரண்டது.

ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 100க்கும் மேற்பட்டவர்கள் மசூதிக்கு வெளியே ஒன்று கூடினர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அதிகாரிகள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், அரசு அதிகாரிகளின் வாகனங்களை தீ வைத்து ஏரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, சாலைகளில் வீசி ஏறியப்பட்டன. இதனால் ஷாஜி ஜமா மசூதி போர்க்களமாக மாறியது. போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து போக சொல்லியும் அவர்கள் கேட்காததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் அப்போது நிலைமை சரியாகவில்லை.

Also Read : அதானிக்கு புது சிக்கல்.. சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. 21 நாட்கள் கெடு!

மசூதியில் ஆய்வுக்கு சென்றபோது மோதல்


இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனை அடுத்து, தொல்லியல் துறை அதிகாரிகள் குழு மசூதிக்குள் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வு குறித்து பேசிய இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சர்வே பணிகள் முடிந்து விட்டதாக கூறினார்.

மேலும், மசூதியின் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த கலவரத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பால் பகுதியல் வன்முறை சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்