வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் ரயில் பயணிகள்..!
Cockroach in Food: போபாலில் இருந்து ஆக்ரா செல்லும் புதிய வந்தே பாரத் விரைவு ரயிலில் ஒரு தம்பதியினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவு பொட்டளத்தை திறந்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த உணவில் கர்ப்பான் பூச்சி கிடந்துள்ளது. உடனடியாக விதித் வர்ஷ்னி என்ற நபர், ரயிலில் பராமரிக்கப்படும் மோசமான சுகாதார சேவைகள் குறித்து புகார் தெரிவித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை, இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டிக்கெட் விற்பனையாளரான ஐஆர்சிடிசியை டேக் செய்து, சமூக ஊடக தளமான எக்ஸ் இல் உணவில் கிடக்கும் கர்ப்பான் பூச்சியின் படத்தை பகிர்ந்துள்ளார்.
வந்தே பாரத் ரயில்: போபாலில் இருந்து ஆக்ரா செல்லும் புதிய வந்தே பாரத் விரைவு ரயிலில் ஒரு தம்பதியினர் பயணம் மேற்கொண்டனர். சுமார் 550 கி.மீ தூரத்தை கடக்க ஏறக்குறைய ஏழு மணி நேரம் ஆகும். இதனால் அவர்களுக்கு ரயிலில் உணவு வழங்கப்பட்டது, ஆனால் சற்றும் எதிர்ப்பாராத வகையில் அவர்களது உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் தளத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து பதிவிட்டனர். ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மக்கள் பலரும் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள ரயில்வே போக்குவரத்தை நம்பியுள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மக்களின் வசதிக்காக புது புது தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் விரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை ரயில்வே துறை இயக்கி வருகிறது. விரைவு ரயில் என்பதால மக்களின் பயண நேரமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today on 18-06-24 my Uncle and Aunt were travelling from Bhopal to Agra in Vande Bharat.
They got “COCKROACH” in their food from @IRCTCofficial. Please take strict action against the vendor and make sure this would not happen again @RailMinIndia @ AshwiniVaishnaw @RailwaySe pic.twitter.com/Gicaw99I17— Vidit Varshney (@ViditVarshney1) June 18, 2024
அந்த வகையில் போபாலில் இருந்து ஆக்ரா செல்லும் புதிய வந்தே பாரத் விரைவு ரயிலில் ஒரு தம்பதியினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவு பொட்டளத்தை திறந்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த உணவில் கர்ப்பான் பூச்சி கிடந்துள்ளது. உடனடியாக விதித் வர்ஷ்னி என்ற நபர், ரயிலில் பராமரிக்கப்படும் மோசமான சுகாதார சேவைகள் குறித்து புகார் தெரிவித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை, இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டிக்கெட் விற்பனையாளரான ஐஆர்சிடிசியை டேக் செய்து, சமூக ஊடக தளமான எக்ஸ் இல் உணவில் கிடக்கும் கர்ப்பான் பூச்சியின் படத்தை பகிர்ந்துள்ளார்.
Sir, We apologize for the travel experience you had.The matter has been viewed seriously and suitable penalty has been imposed on concerned service provider. We have also intensified the production and logistics monitoring.
— IRCTC (@IRCTCofficial) June 20, 2024
அந்த நபர் உணவு விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இது யாருக்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த IRCTC, ” உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாகப் பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் தளவாட கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம். ” என தெரிவித்துள்ளது.
Also Read: விஜயின் ‘தி கோட்’ படத்தின் கதை இதுதானா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!