5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Gandhi: ”எனது வீட்டில் ED ரெய்டு நடக்கும்” பகீர் தகவல் சொன்ன ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டிற்கு அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்து பேசியிருந்தேன். இதற்காக தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அமலாக்கத்துறையினரின் வருகைக்காக டீ மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Rahul Gandhi: ”எனது வீட்டில் ED ரெய்டு நடக்கும்” பகீர் தகவல் சொன்ன ராகுல் காந்தி!
ராகுல் காந்தி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Aug 2024 09:12 AM

“ராகுல் காந்திக்கு எதிராக ED ரெய்டு” நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. 23ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆளும் தரப்பு, எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான விவாதங்களுக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டிற்கு அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்து பேசியிருந்தேன். இதற்காக தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அமலாக்கத்துறையினரின் வருகைக்காக டீ மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: திருமணமான பெண்கள் பெயரை மாற்ற கணவனின் அனுமதி வேண்டுமா? மத்திய அரசின் புதிய விதி இதுதான்!

மக்களவையில் ராகுல் காந்தி பேசியது என்ன?

சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு மக்களவையில், “மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் புதிய சக்கரவியூகத்தை அமைத்துள்ளனர்” என்றார்.  மேலும், “21ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய சக்கரவியூகம் உருவாகி இருக்கிறது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மோடி அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கு நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு, நடுத்தர தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இன்று சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர்.

Also Read: வயநாடு நிலச்சரிவு கோரம்.. 300-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தமிழர்களின் நிலை என்ன?

நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதான கட்டுப்படுத்தி வருகிறார்கள்.  இந்தியாவை கைப்பற்றியுள்ள சக்கர வியூகத்திற்கு பின்னால் 3 படைகள் உள்ளன. ஒன்று இந்தியச் செல்வம் முழுவதையும் 2 பேர் சொந்தமாக்க அனுமதிக்கிறது. இரண்டாவது நாட்டின் நிறுவனங்கள், ஏஜென்சிகள், சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி. மூன்று அரசியல் நிர்வாகிகள். இந்த மூன்றும் சேர்ந்து சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர். அவைகள் இந்த நாட்டை சீரழித்துவிட்டன” என கூறியிருந்தார்.

 

Latest News