“295 இடங்கள்” கருத்துக்கணிப்பு குறித்து கேள்வி.. ராகுல் காந்தி அளித்த நறுக் பதில்! - Tamil News | | TV9 Tamil

“295 இடங்கள்” கருத்துக்கணிப்பு குறித்து கேள்வி.. ராகுல் காந்தி அளித்த நறுக் பதில்!

Updated On: 

02 Jun 2024 14:40 PM

Loksabha Exit Poll Results: காங்கிரஸின் ராகுல் காந்தி கருத்துக் கணிப்பு  முடிவுகள் குறித்து பதிலளித்துள்ளார். "இது எக்ஸிட் போல் இல்லை. இது மோடி மீடியா போல். இது அவரது கற்பனைக் கருத்துக் கணிப்பு" என்றார். மேலும், காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "சித்து மூஸ் வாலா பாடல் கேட்டு இருக்கீங்களா? அதில் வருவது போல 295 இடங்களில் வெல்லும்" என்று கூறியுள்ளார்.

295 இடங்கள் கருத்துக்கணிப்பு குறித்து கேள்வி.. ராகுல் காந்தி அளித்த நறுக் பதில்!

ராகுல் காந்தி

Follow Us On

கருத்துக்கணிப்பு குறித்து ராகுல் காந்தி பதில்: நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் அறிவிக்கப்படும். நேற்று தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்கள் வரை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கூட்டணி 167 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காங்கிரஸின் ராகுல் காந்தி கருத்துக் கணிப்பு  முடிவுகள் குறித்து பதிலளித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைமை இன்று ஆலோசனை நடத்தியது.

Also Read: பாஜகவுக்கு 400 இடங்களா? எக்ஸிட் போல் குறித்து பிரசாந்த் கிஷோர் பதில்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இது எக்ஸிட் போல் இல்லை. இது மோடி மீடியா போல். இது அவரது கற்பனைக் கருத்துக் கணிப்பு” என்றார். மேலும், காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “சித்து மூஸ் வாலா பாடல் கேட்டு இருக்கீங்களா? அதில் வருவது போல 295 இடங்களில் வெல்லும்” என்று கூறியுள்ளார்.

கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு முன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்கே, ”மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, I.N.D.I.A கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று வலுவான ஆட்சியை அமைக்கும். தேர்தலில் பாஜக 220 இடங்களிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்றார்.

Also Read: சிக்கிமில் பிராந்திய கட்சி வெற்றி.. அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி!

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version