5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana Election Result: ”ஹரியானாவின் வெற்றி எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது” – எம்.பி ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு..

ஹரியானா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஹரியானாவில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த முடிவுகள் சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸிற்கு அமைந்துள்ளது.

Haryana Election Result: ”ஹரியானாவின் வெற்றி எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது”  – எம்.பி ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு..
ஜெய்ராம் ரமேஷ்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 08 Oct 2024 18:14 PM

ஹரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். ஜனநாயக ஜனதாக கட்சி 66 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் போட்டியிட்டனர். மேலும், ஆம் ஆத்மி 88 இடங்களிலும் போட்டியிட்டனர். 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள் மற்றும் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 46 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதேபோல், காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஹரியானாவில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் காங்கிரஸ் அபார வெற்றி பெறும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த முடிவுகள் சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸிற்கு அமைந்துள்ளது.


ஹரியானா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ” ஹரியானாவைப் பற்றி என்ன பகுப்பாய்வு செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வோம். ஆனால், முதலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் புகார்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். என்ன செய்தோம், என்ன செய்யவில்லை, எங்கே தவறு செய்தோம், இதைப் பற்றிய அலசல் நிச்சயம் இருக்கும். ஒரு குழுவும் அமைக்கப்படும், இது காங்கிரஸ் கட்சியில் நடைமுறையில் இருந்து வருகிறது, அனைவரிடமும் பேசி பகுப்பாய்வு செய்யப்படும்.

மேலும் படிக்க: இயற்பியலுக்கான நோபல் பரிசு.. வென்ற இருவர்.. எதற்காக தெரியுமா?

ஆனால் இப்போது பகுப்பாய்வு செய்ய நேரம் இல்லை. வெற்றி எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது, சிஸ்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பதுதான் இப்போதைக்கு முக்கியமான விஷயம். மக்கள் மற்றும் அனைவரின் உணர்வுகளும் அடிப்படை யதார்த்தம் மாற்றத்திற்கு சாதகமாக இருப்பதாக உணர்ந்தனர் ஆனால் இன்று வந்துள்ள முடிவு அதை பிரதிபலிக்கவில்லை. கண்டிப்பாக ஒரு அலசல் இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.


மேலும், “ ஹரியானா அத்தியாயம் முழுமையடையவில்லை, அது தொடரும். ஜம்மு காஷ்மீரில் நிச்சயமாக கூட்டணி ஆட்சி அமையும் அத்தியாயம். நேற்று வரை நான் கூறியது போல், காங்கிரஸ்-என்சி கூட்டணிக்கு பெரும்பான்மை வராமல் இருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்த கூட்டணி அரசுக்கு மிகத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் ஆணையம் மீது ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், “ ஹரியானா தேர்தல் முடிவுகளைப் புதுப்பிப்பதில் தாமதம் தொடர்பாக ஸ்ரீ ஜெய்ராம் ரமேஷின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. தோராயமாக அனைத்து தொகுதிகளிலும் 25 சுற்றுகள் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு புதுப்பிக்கப்படுகின்றன. சட்ட விதிகளின்படி எண்ணும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளது.

 

Latest News