Rahul Gandhi mp: “வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்” எம்.பியாக பதவியேற்ற ராகுல் காந்தி.. உற்று கவனித்த பாஜக!
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். அரசமைப்பு பத்தகத்தை கையில் ஏந்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். வயநாடு தொகுதியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்கும்போது 'வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்' என முழக்கம் எழுப்பினார். மேலும், ராகுல் காந்தி பதவியேற்கும்போது, I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் ’பாரத் ஜோடோ’ என முழக்கமிட்டனர். பின்னர், தற்காலிகா சபாநாயகர் எழுந்து நின்று ராகுல் காந்திக்கு கை கொடுத்தார்.
எம்பியாக பதவியேற்ற ராகுல் காந்தி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். குறிப்பாக, இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். அரசமைப்பு பத்தகத்தை கையில் ஏந்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். வயநாடு தொகுதியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்கும்போது ‘வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம்’ என முழக்கம் எழுப்பினார். மேலும், ராகுல் காந்தி பதவியேற்கும்போது, I.N.D.I.A கூட்டணி எம்.பிக்கள் ’பாரத் ஜோடோ’ என முழக்கமிட்டனர். பின்னர், தற்காலிகா சபாநாயகர் எழுந்து நின்று ராகுல் காந்திக்கு கை கொடுத்தார்.
#WATCH | Congress MP Rahul Gandhi takes oath as a member of the 18th Lok Sabha. pic.twitter.com/2UjQqn7CYd
— ANI (@ANI) June 25, 2024
ரேபரேலி தொகுதியை தக்க வைத்த ராகுல் காந்தி:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றினார். ரேபரேலி தொகுதியில் 6.87 லட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட சுமார் 2.97 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அதேபோல, வயநாடு தொகுதியில் 6.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மூத்த இடதுசாரி தலைவர் ஆனிராஜவை தோற்கடித்தார் ராகுல் காந்தி. வென்ற 2 தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க கொடுக்க வேண்டிய கட்டாயம் என்பதால் அவர் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரேபரேலி தொகுதியை தக்க வைத்தார். அதேசமயம், வயநாடு தொதியில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்காவை களமிறங்க உள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இதனால் ரேபரேலி தொகுதி காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதோடு, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தி தொடங்கி தாய் சோனியா காந்தி வரை நேரு குடும்பத்தினர் பாரம்பரியாக போட்டியிடும் தொகுதியாக ரேபரேலி உள்ளது. பெரோஸ் காந்தி இரண்டு முறையும், இந்திரா காந்தி மூன்று முறையும், சோனியா காந்தி ஐந்து முறையும் வெற்றி பெற்றனர். இப்படி அரசியில் முக்கியத்துவம் காரணமாக ரேபரேலி தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி தக்க வைத்துள்ளார்.
Also Read: கெஜ்ரிவாலுக்கு தொடர் சிக்கல்.. ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்!